தமிழின் நவீனத்துவம் – பிரமிள்

1. படைப்பாளியின் முன் இன்று, கவிதை, உரைநடை இரண்டிலும் இருந்து பிரச்னைகள் பிறந்துநிற்கின்றன. தமிழ் மொழிப்பிரயோகம் பற்றிய பிரச்னையை எடுத்தால், இதைத் தொடமுயற்சிக்கிற நான், 1957 அளவில் ஒரு சிறிது காலம், “தனித்தமிழில், அதாவது பிறமொழிச் சொற்கள் கலக்காத தமிழில் எழுதுவதே சிறப்பு,” என்ற கொள்கையைச் சார்ந்து இருந்தவன் என்பதை, இங்கே மனம்விட்டுச் சொல்லிவிடவேண்டும். இந்த எனது சார்பைச் சிதறடித்தவை, புதுமைப்பித்தனது இலக்கியமும் சிந்தனைக் கட்டுரைகளும்தான். பாஷை, வெறும் சொற்களில் மட்டும் தங்கி நிற்கிற ஒன்றல்ல. சொற்கள் … Continue reading

நான் எழுத்தாளனான கதை-பிரமிள்

திரு.வெங்கட் சாமிநாதன் பிரமிள் எழுதி இதுவரை வெளியாகாதிருந்ததொரு கட்டுரையின் கைப்பிரதியை சொல்வனத்தில் வெளியிடுவதற்காகக் கொடுத்தார். இக்கட்டுரையில் தனக்கு இலக்கியத்தில் ரசனையும், ஆர்வமும் ஏற்பட்டதன் பின்னணியை விவரிக்கிறார் பிரமிள். அவர் எழுத்தாளரான நிகழ்வையும் குறிப்பிட்டிருக்கிறார். என் தகப்பனார், தாயார் இருவருக்குமே சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைவிட அதீதமான உணர்ச்சி இருந்திருக்கிறது. தகப்பனாரின் நேர்மை, தாயாரின் பெண்மைக்கும் கற்பனைக்கும் உரிய இயற்கையான சாகஸங்களை இது விரூபமாகத்தான் காண அவரைத் தூண்டியிருக்கிறது. இதன் விளைவாக அவர்கள் பெரும்பாலும் சண்டையிட்டே வாழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சண்டைகளின்போது … Continue reading

நீலம் – பிரமிள்

அவர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக் கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்க்காரர்கள் வந்து பார்ப்பார்கள்.கோழிச் சண்டையில் இறகுகள் பறக்கிற மாதிரி அவரது படங்களைச் சுற்றி விமர்சனங்களும் பறக்கும்.   மற்றபடி அவருக்கு ஆர்ட்டுடன் சம்பந்தம் இல்லாத அவரது ஆபீஸ் உண்டு.குடும்பம் உண்டு. ரசிகர்கள், அதுவும் பெரிய இடத்து ரசிகர்கள் வீசும் ரசனைகளை … Continue reading

நினைவோடை : பிரமிள் – சுந்தர ராமசாமி

(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்) சிவராமூவை (பிரமிள்) நான் நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது எனக்குக் கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. அவர் சாதாரணமானவர் அல்ல என்ற நினைப்பு எப்படியோ மனதிற்குள் வந்திருந்தது. முதலில் படித்த ஒருவருடைய எழுத்து எது என்பதையோ, முதலில் ஒருவரைப் பார்த்தது எப்போது என்றோ சொல்லும்போது என் ஞாபகம் பற்றிச் சிறிது நம்பிக்கையில்லாமல்தான் இருக்கிறது. சிறு பிசகு அதில் இருக்கலாம். பெரிய பிசகு இருக்காது என்று நினைக்கிறேன். சிவராமூ எழுத்துவில் … Continue reading

வண்ணத்துப்பூச்சியும் கடலும்- பிரமிள்

    வண்ணத்துப்பூச்சியும் கடலும் சமுத்திரக் கரையின் பூந்தோட்டத்து மலர்களிலே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப் பூச்சி… வேளை சரிய சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல்நோக்கிப் பறந்து நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஓய்ந்து அமர்ந்தது. முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது. ****** (உன்) பெயர் சீர்குலைந்த சொல்லொன்று தன் தலையைத் தானே விழுங்கத் தேடி என்னுள் நுழைந்தது. துடித்துத் திமிறி தன்மீதிறங்கும் இப் … Continue reading

>ஒளிக்கு ஒரு இரவு-பிரமிள்

> ஒளிக்கு ஒரு இரவு-பிரமிள் காக்கை கரைகிறதே பொய்ப்புலம்பல் அது. கடலலைகள் தாவிக் குதித்தல் போலிக் கும்மாளம். இரும்பு மெஷின் ஒலி கபாலம் அதிரும். பஞ்சாலைக் கரித்தூள் மழை நுரையீரல் கமறும். அலமறும் சங்கு இங்கே உயிர்ப்புலம்பல். தொழிலின்  வருவாய்தான் கும்மாளம். லாப மீன் திரியும் பட்டணப் பெருங்கடல். தாவிக் குதிக்கும் காரியப் படகுகள். இயற்கைக்கு ஓய்வு ஓயாத மகத் சலித்த அதன் பேரிரவு. நிழல்கள்-பிரமிள பூமியின் நிழலே வானத் திருளா? பகலின் நிழல்தான் இரவா? இல்லை, … Continue reading

காடன் கண்டது – பிரமிள்

எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு. பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். ஒண்ணுக்கு இன்னும் பேர் ரஸ்தா. அதே மாதிரி கல்லிலும் புல்லிலும் கால்பட்டுத் தேய்ஞ்ச இன்னொண்ணு பேரில்லாத காட்டுத்தடம். வெய்யிலில் எருமைப்பள்ளம் தண்ணி வத்தி, களி காறைகட்டிப் பொளந்து கெடக்கும். ஊரெல்லாம்  களிமண்ணு. கூடவே … Continue reading

>பிரமிள் கவிதைகள்

> பிரமிள் ஒளிக்கு ஒரு இரவு– காக்கை கரைகிறதே பொய்ப்புலம்பல் அது. கடலலைகள் தாவிக் குதித்தல் போலிக் கும்மாளம். இரும்பு மெஷின் ஒலி கபாலம் அதிரும். பஞ்சாலைக் கரித்தூள் மழை நுரையீரல் கமறும். அலமறும் சங்கு இங்கே உயிர்ப்புலம்பல். தொழிலின் வருவாய்தான் கும்மாளம். லாப மீன் திரியும் பட்டணப் பெருங்கடல். தாவிக் குதிக்கும் காரியப் படகுகள். இயற்கைக்கு ஓய்வு ஓயாத மகத் சலித்த அதன் பேரிரவு. நிழல்கள் பூமியின் நிழலே வானத் திருளா? பகலின் நிழல்தான் இரவா? … Continue reading

>பிரமிள்

> (பிரமிள் 1939-1997. தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள், 20.04.1939-ல் இலங்கைத் திருக்கோணமலையில் பிறந்து வளர்ந்தவர்; எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியா வந்துவிட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள காரைக்குடியில் 6.01.1997-ல் மறைந்தார். தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த ‘எழுத்து’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் அவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது. நவீன தமிழ் … Continue reading