வெண்கல குத்துவிளக்கு – பி. எஸ். ராமையா

ஆதிகணபதி செட்டியார் அந்த தடவை சென்னைக்குப் போய் வந்தவுடன், கிராமத்தில் கோயில்கொண்டெழுந்தருளியிருந்த அநுமார் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிப் பரபரப்புடன் சொன்னார். கிராமத்தில் வாங்கிய தங்கத்தைச் சென்னையில் விற்பதற்காகப் போய்கொண்டிருந்தார் செட்டியார். “மடியிலே கனத்துடன் போகிறோம்;கொஞ்சத்துக்குச் சோம்பி வம்புக்கு இடம் கொடுத்து விடக்கூடாது’ என்று இரட்டைக்கோட்டு (இரண்டாம் வகுப்பு) டிக்கெட் கேட்டு வாங்கினேன். திருச்சியில் யாரோ பெரிய ஆபிஸர் போலிருக்கிறது,குடும்பத்துடன் வந்து ஏறினார். கூட இரண்டு டவாலிச் சேவகர்கள் இருந்தார்கள். அந்த வண்டி செங்கல்பட்டுக்குக் கையெழுத்து விளங்காத நேரத்தில் … Continue reading

>நட்சத்திரக் குழந்தைகள் – பி. எஸ். ராமையா

> ’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா  உண்டோ?’ ‘உண்டு அம்மா!’ ‘அவர் யார் அப்பா?’ ‘சுவாமி.’ ‘சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?’ ‘ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’ ’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?’ ‘ஆமாம்’ ‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப…. ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே.  அவா அப்பா எப்படி … Continue reading

>பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையா

> பி.எஸ். இராமையா நாலைந்து வீடு தள்ளியிருந்த தெருமுனையிலிருந்து ஒரு நாய் ஊளையிட்ட சத்தம் வந்தது. இரவு மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். அருணாசல முதலியாரைச் சூழ்ந்திருந்த யாவரையும் அந்த ஊளை ஒரு குலுக்குக் குலுக்கியெடுத்தது. அறையில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வாசல் திண்ணையில் இருளில் உட்கார்ந்திருந்தவர்களும், வீட்டினுள் கூடத்தில் கூடி, சிரமத்துடன் மெளனம் பயின்ற பெண்மக்களும் திடுக்கிட்டுப் பார்த்தனர். திண்ணையில் இருந்த ஒருவர் நாயை விரட்ட எழுந்து போனார். … Continue reading

>நிலா பார்த்தல்-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம் பி.எஸ்.ராமையா முதன் முறையாக என் பையனை சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு அழைத்துப்போன நாளில் அவன் படம் துவங்கியதும், ‘அப்பா ரிமோட்டைக் குடு… சவுண்டைக் குறைக்கணும்!’ என்று கைகளை நீட்டினான். ரிமோட் கிடையாது என்று விளக்கினால் அவனுக்குப் புரியவில்லை. பிடிவாதமாக, ‘ரிமோட் வேண்டும்!’ என்று கத்தி கூப்பாடுபோட்டு, அரங்கத்தைவிட்டு வெளியே வரும்படி செய்தான். வீடு வந்த பிறகு ஓடிச் சென்று டி.வி&யின் ரிமோட்டை எடுத்துக்கொண்டு, ‘இதை தியேட்டருக்கு எடுத்துப் போயிருந்தால் சத்தத்தைக் குறைந்திருக் … Continue reading