பூமணிக்கு கீதாஞ்சலி விருது – தமிழ்மகனுக்கு கோவை இலக்கிய விருது

கீதாஞ்சலி  விருது கோவை இலக்கிய விருது பூமணி தமிழ்மகன் .பிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும்  ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு … Continue reading

பூமணியின் படைப்புலகம்-ஜெயமோகன்

பூக்கும் கருவேலம்–பூமணியின் படைப்புலகம் ஜெயமோகன் விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது ‘பிறகு ‘ ‘ வெக்கை ‘ ஆகிய இரு நாவல்களும் ‘ ரீதி ‘ என்ற சிறுகதைதொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ , பிரச்சினைகளை எளிமைப்படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப்படைப்புகள் அவை.அவரது நாவல்கள் … Continue reading

பூமணி-க்கு விஷ்ணுபுரம் விருது

  விஷ்ணுபுரம் விருது 2011 தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளார் யுவன் சந்திரசேகர், எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளார் நாஞ்சில்நாடன் கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார், இயக்குனர் … Continue reading

பேனாக்கள் – பூமணி

அவன் தாத்தா ரொம்பநாளாய் ஒரு பேனா வைத்திருந்தார். அவன் சின்ன வயசாயிருக்கும்போதே அவர் பையில் இருந்தது. கடைசிவரைக்கும் புதிசுமங்காமல் வைத்திருந்தாரே அதுதான் பெரிய காரியம். பையிலிருந்து அபூர்வமாய்த்தான் எடுத்து இரண்டு வரி எழுதுவார். எழுதும்போது கவரைப் பையில் குத்தியாகணும். பேனாவுக்குப் பின்னால் சொருகி எழுதுவதேயில்லை. கை நடுக்கத்திலும் தானாகவே மையடைப்பார். வெள்ளைத் துணி வைத்து மெனக்கிட்டு துடைத்து வெண்கலக் குடம் மாதிரி விளக்குவார். இத்தனைக்கும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து ராம ஜெயம், நாலு பிள்ளையார் சுழிதான் … Continue reading

எதிர்கொண்டு-பூமணி

வெளியே சாயங்காலச் சத்தங்கள் வெளிச்சத்தைப் போல் உள்வாங்கிக் கொண்டிருந்தன. கீழ்வீட்டுக்காரி இன்னேரம் வந்திருக்கணுமே. வேலைக்காரனிடம் பெருமை கொழித்துக்கொண்டு பொடி நடையாக வருவாள். அவன் இவளுக்குத் துணை போனவன். அதென்ன வாய் ஓயுதா கை ஓயுதா. ராத்திரி நேரங்கூடத் தூங்குவாளோ என்னமோ. என்னேரம் பார்த்தாலும் வாய் பொரிப் பொரியும். சுட்டுப் போட்டாலும் இன்றைக்கு அவளுக்கு உறக்கம் வராது. கனைத்துக் கனைத்து அழுகணும். திருணையில் குப்புறப் படுத்து முதுகில் காலால் தாளம் போட்ட சுந்தரம் திருப்பிக்கொண்டான். நேரத்தோடு சோறுகேட்டு அம்மாவிடம் … Continue reading

>போட்டி-பூமணி

> மார்கழிக் குளிரில் சுவர்ந்துவரும் சுலோகங்களின் தாள லயத்தில் தூக்கமுற்றுகை தளர்ந்து மனசு மெல்லத் திறந்தது. அவன் மல்லாக்கப் புரண்டான். அலமாரிக் கண்ணாடியில் அழகிய புல்வெளியின் விரிப்பு மங்கலாகத் தெரிந்தது. பார்வையைத் துடைத்துக் கொண்டான். பசுமை படர்ந்த கோகுலக் காடுகள். மரத்தடியில் கால்பின்னிய கோலத்தில் மாயக்கண்ணன் கண்சொருகிக் குழலூதுகிறான். நிரவிக் கிடக்கும் ஆநிரைகள் நிலைமறந்த புல்லரிப்பில் சொக்கி நிற்கின்றன. இரையசையில் பிரிந்த தாடைகள் இணையாத கிறக்கம். கடைவாயில் கள்ளத்தனமாகக் கண்ணனைப் பார்க்கும் புல்லிதழ்கள். நீர்நிலையில் நிற்பவை செவிசாய்த்து … Continue reading

>ரீதி – பூமணி

> அப்படியே முடிவாயிற்று. மூன்று பேரும் ஓடமரத்து நிழலில் போய் உருண்டார்கள். தொரட்டிக் கம்பு மரக்கொம்பைக் கவ்வி ஏலவட்டம் போட்டது. உதிர்ந்து கிடந்த பூக்கருகல்களைப் பொறுக்கி நெறித்துக்கொண்டே பெரியவன் கேட்டான். “அப்ப இண்ணக்கி கஞ்சியில்லையாக்கும். எங்க வீட்டில ஆருருந்தா?” சின்னவன் தொண்டையை நனைத்தான். “ஒங்கம்மா புள்ளையாட்டீட்டிருந்தா ‘புளிச்ச தண்ணிக்குள்ள” கூட இல்லனு கையை விரிச்சுட்டா… அவன் வீட்ல ஆளவே காணும்…” “நீ குடிச்சிட்டு வந்தயா?” “அதெல்லாம் கேலி மயிருல்ல. கொஞ்சம் நஞ்சம் இருந்ததவும் எங்கண்ணக்காரன் உருட்டீட்டான்.” “ஆரு … Continue reading

>தொலைவு-பூமணி

> பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று. ‘சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். ‘ ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் காலடியில் மேரிக்குட்டி பஸ்டாண்டில் பார்வை விளையாட நின்றிருந்தாள். அந்தோணியும் வயலெட்டும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு குழந்தைகளும் இடையில் ஓடி தொந்தரவு செய்தன. ஆனாலும் சட்டை செய்யவில்லை. ஒரு தடவை அந்தோணி அரட்டினான். ‘ஏலே சும்மா இரியேம்லே கையக்கால வச்சிட்டு. ‘ ரோசம்மா முறுவலித்தாள். ‘என்னதான் … Continue reading

>ஆழம்-பூமணி

>   அவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது. கடலுக்குமேல் மெல்லக் கலையும் சாம்பல் புகைமண்டலம். அங்குமிங்குமாகத் திரியும் பறவைத் தூள்கள். தொலைவிலிருந்து சூரியனைப் புரட்டித் தள்ளிவரும் அலைகள். மைதானத்தில் மழை பரப்பியிருந்த நீரில் சர்க்கரைச் சாரல் உதிர்ந்து கரைந்தது. காக்காய்கள் குதித்துக் குதித்து தலையால் கோலிக் குளித்துச் சிலிர்த்தன. மனைவி பாத்ரூமுக்குள்ளிருந்தாள். ‘தலைய ஒணத்துடா. ‘ … Continue reading

>கோலி – பூமணி

> பூமணி சுப்புவுக்குப் பள்ளிக்கூடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி உட்காருவது நிற்பது பாடுவது படிப்பது ஒரே சமயத்தில் ஒண்ணுக்குப் போவது சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது ஒரே விளையாட்டைச் சேர்ந்து விளையாடுவது, அதென்ன படிப்பு. நெருக்கும் போது ஒண்ணுக் கடிக்கணும். தவிக்கும் போது தண்ணீர் குடிக்கணும். தோணும் போது விளையாடணும். இன்ன விளையாட்டு என்றல்லாம்  இஷ்டத்துக்கு விளையாடணும். வேப்ப மரத்தில் ஏறி ஊஞ்சலாடணும். வகுப்பில் ஒளிந்து தேடிப்பிடிக்கணும். பக்கத்திலுள்ள குமரன்கோயில் மலைக்கு ஓடி கால்வலிக்கப் படியேறி … Continue reading