ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு – எஸ்.ரா

ப.சிங்காரம் என்ற பெயர் புது யுகம் பிறக்கிறது இதழில் சி. மோகன் எழுதிய நாவல் பற்றிய கட்டுரையில்தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது. மோகன் தமிழின் சிறந்த நாவலாசிரியர் வரி சையில் சிங்காரத்திற்குத் தனியி டம் அளித்திருந்தார். அந்த நாட் களில் ஜானகிராமன், ஜெயகாந் தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு சிங்காரம் யார் என்ன எழுதியிருக் கிறார் என்ற குழப்பம் உண்டா னது. எனது சேமிப்பிலிருந்த சிறு பத்திரிகைகளைப் புரட்டிப்புரட் டிப் … Continue reading

>ப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..

> ‘எல்லாம் யோசிக்கும் வேளையில்…’ ந. முருகேசபாண்டியன் பெரிய கட்டடத்தின் மாடிப் படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத் துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன். தூய வெள்ளாடை உடுத்திய கருத்து வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக் கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது. சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கட-கடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில் ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தன. கரடுமுரடான ஓசை. எங்கும் மிஷின் எண்ணெய் நெடியும் புழுக்க நாற்றமும் கசகசப்பான மனநிலை. ‘திரும்பிப் போயிடலாம். அவரை இன்னொருக்க பார்க்கலாம்.’ … Continue reading

>புயலிலே ஒரு தோணி-ப.சிங்காரம்

> நாவலின் முதல் அத்தியாயம் – கெர்க் ஸ்ட்ராட் ப.சிங்காரம். காலைக் கருக்கிருட்டு நேரம்; தெருவிளக்குகள் எரியவில்லை. இப்பொழுதுதான் மழை தூறி ஓய்ந்திருக்கிறது. ஜப்பானியத் துருப்புகளின் வரவை எதிர்நோக்கி மெடான் நகரினர் தெருவின் இருமருங்கிலும் கூடி நிற்கிறார்கள். கூட்டத்திலிருந்து பலவகை ராகங்களில் கிளம்பும் மலாய் பஹாசாவின் மெல்லோசையைப் பரபரப்பான சீனமொழி ஊடறுக்கிறது. ஊர் நடுவே கிழக்கு மேற்காகக் கடக்கும் தெரு இது _ கெர்க் ஸ்ட்ராட். இந்தத் தெரு சேறும் சகதியுமாய் இருபுறமும் நீப்பா புதர்கள் மண்டிக்கிடந்த … Continue reading

>ப. சிங்காரம்

> தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் வட்டம், சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் நாடார் பேட்டையில் 1920_ஆம் ஆண்டு ஆகஸ்டு 12_ஆம் தேதி ப. சிங்காரம் பிறந்தார். தந்தை மூக்க நாடார் என்ற கு. பழநிவேல் நாடார் ; தாயார் பெயர் உண்ணாமலை அம்மாள். இவர்களுக்கு சிங்காரம் மூன்றாவது மகன். அப்போது, சிங்காரத்தின் தந்தை, அண்ணன்கள் ப. சுப்பிரமணியம், ப. பாஸ்கரன் மற்றும் அவரது தாத்தா ப. குமாரசாமி நாடார் ஆகியோர் சேர்ந்து சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து … Continue reading

>வரலாற்று அபத்தத்தின் தரிசனம்-ஜெயமோகன்

> (ப. சிங்காரம் படைப்புலகம் குறித்து….) ஜெயமோகன் ஓர் இலக்கியப் படைப்பின் சிறப்பம்சம் எதுவோ அதுவே அதன் வாசிப்புக்குத் தடையாகவும் ஆகும் என்று படுகிறது. ஏனெனில், அது நமது பழகிப்போன வாசிப்பைத் தடைசெய்து புதிய மனநிலையை, புதிய வாசிப்பு முறையைக் கோருகிறது. ஓர் அசலான கலைப்படைப்புக்கு எப்போதும் நூதனத்தன்மை _ இதற்கு முன்பு இதுபோல ஒன்று இல்லை என்ற உணர்வு இருக்கிறது என்பதை இதனுடன் சேர்த்து யோசிக்கலாம். சிங்காரத்தின் படைப்புகளில் நமக்குத் தடையாக அமையும் அம்சங்களையே அவற்றின் … Continue reading