நான் – மகாகவி பாரதியார்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், வாரியினுள் உயிரெலாம் நான், கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உரவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில்நகர் கோபுரம் யாவுமே நான், இன்னிசை மாதரிசையுளேன் நான், இன்பத்திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான், … Continue reading

ஆறில் ஒரு பங்கு- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

முகவுரை ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது. இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். “நாந்ய பந்தா வர்த்ததே அயநாய” வேறு வழியில்லை. இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், … Continue reading

இரு கடிதங்கள் – மகாகவி பாரதியார்

தம்பி விசுவநாதனுக்கு கடிதம் புதுச்சேரி, 3 ஆகஸ்டு, 1918 ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் … Continue reading

புதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

13 மே 1916                                            நள சித்திரை 21 வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும். நேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு … Continue reading

ஜப்பானியக் கவிதை-மகாகவி பாரதியார்

18 அக்டோபர் 1916  நள ஐப்பசி 5 ஸமீபத்தில் “மார்டன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில்உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒருலிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால்:- இங்கிலாந்து அமெரிக்காஎன்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன? மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல்சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும்,சோம் பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அதுபோகிற … Continue reading

"என் கணவர்" – செல்லம்மாள் பாரதி

    மகாகவி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921). திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு. எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் … Continue reading

வெறுங் காட்சிப் பிழைதானோ?

மகாகவி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921). நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம் அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் … Continue reading

>காக்காய் பார்லிமெண்ட்-மகாகவி பாரதியார்

> நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார். “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார். காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம். ‘கா’ என்றால் … Continue reading

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921). தேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி – கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?

>ஒளியும் இருளும்-மகாகவி பாரதியார்

> ஒளியும் இருளும் வான மெங்கும் பரிதியின் சோதி; மலைகள் மீதும் பரிதியின் சோதி; தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே தரையின் மீதுந் தருக்களின் மீதும் கான கத்திலும் பற்பல ஆற்றின் கரைகள்மீதும் பரிதியின் சோதி; மான வன்ற னுளத்தினில் மட்டும் வந்து நிற்கும் இருளிது வென்னே! சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம், தோன்றி யெங்குந் திரைகொண்டு பாய, சோதி யென்னும் பெருங்கடல், சோதிச் சூறை, மாசறு சோதி யனந்தம், சோதி, யென்னு நிறைவிஃ துலகைச் சூழ்ந்து … Continue reading