மா. அரங்கநாதன் நேர்காணல்

நேர்காணல்: ஆர்.சி.ஜெயந்தன்   படங்கள் : செழியன் ஓவியம்- ஜேகே உங்கள் கதைகளில் முத்துக்கருப்பன் என்ற பாத்திரம் தொடர;ந்து வருகிறது. உண்மையில் முத்துக்கருப்பன் யார்? ‘‘என்னால் விளக்கிச் சொல்ல முழயாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு உதவி செய்கிறவன் முத்துக்கருப்பன். கதை என்றால் என்ன – கவிதை என்றால் என்ன என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அது என்னவென்று தொpந்தால் அது இனிமேல் இருக்காது இல்லையா? கடவுள் சமாச்சாரம்கூட அப்படித்தானே!’’ பிராமண … Continue reading

பிரபஞ்சனுக்கு சாரல் விருது 2013

  ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளை சார்பில், எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியன் ஆகியோரை நடுவராகக்கொண்டு வருடாவருடம் சாரல் விருது இலக்கிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு சாரல் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள்: 2009- திலீப்குமார் 2010- ஞானக்கூத்தன் 2011-அசோகமித்திரன் 2012-வண்ணநிலவன், வண்ணதாசன் விழா ஜனவரி 26 சனிக்கிழமை நடைபெறுகிறது. அனைவரும் வருக. விழா அழைப்பிதழ்

க. நா. சு. வின் ஓர் உரை

க.நா.சு.100 இத்துடன் வெளியாகும் க.நா.சு.வின் உரை 16.2.1988 ஆம் நாள் ஒய்.எம்.ஸி.ஏ. கருத்தரங்கில் நிகழ்த்தப் பெற்றது. சிறுகதைபற்றிய பல விளக்கங்களையும் கொண்டிருப்பதே அவ்வுரையின் முக்கியத்துவம். இதுவரை பிரசுரமாகாதது. மா. அரங்கநாதனின் ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பு பற்றிய கருத்தரங்கத்தின் போது ஆற்றிய உரை. () () () இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புத்தக விமர்சன கூட்டங்களுக்குப் போனால் விமர்சனங்களில் ஒரு மாறுதல் இருப்பதையும் ஓரளவிற்கு புத்தகங்களைப் பற்றி பொதுவாகப் பேசுவதற்கு பலபேர் தயாராக … Continue reading

க.நா.சு. – கடைசி நாட்களில்-மா. அரங்கநாதன்

க.நா.சு.100 கடைசி இரண்டாண்டுகளில்தான் அவருடன் பழக முடிந்தது. முன்பு அறுபதுகளில் அவர் தில்லி செல்லுமுன் ஓரிருமுறை பார்த்ததுண்டு. பள்ளி முடியும் தறுவாயிலேயே ‘‘பொய்த் தேர்வு’’, ‘‘ஒரு நாள்’’ போன்ற நாவல்களைப் படித்துவிட்டபோதிலும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கிடையாது. எண்பத்தேழில் மேநாட்டு இலக்கியங்கள் குறித்துப் பேசவேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளச் சென்ற வகையில் அடிக்கடிச் சந்திக்க முடிந்தது. ஏழெட்டுக் கூட்டங்கள் ‘‘முன்றில்’’ இலக்கிய இதழ் சார்பில் நடந்து பிரஞ்சு, ஸ்பானிஷ் நூல்கள் பற்றி நிறையப் … Continue reading

எழுத்தாளுமைகள் பற்றிய ரவிசுப்ரமணியனின் ஆவணப்படங்கள்

1. ஜெயகாந்தன்:எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் “ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால், அவன் ஒரு பேட்டியிலோ அல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சார்ந்த நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை. ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைப்படுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. … Continue reading

காடன் மலை- மா. அரங்கநாதன்,

‘‘ஐயா-மலையை வலப்புறமா சுத்தணுமா-இடப்புறமாவா.’’ ‘‘எப்படி வேண்டுமானாலும் சுத்து – மலையைப் பாக்கணும் – அதுதான் முக்கியம்.’’ அந்த இடத்திற்கு விசேட நாளன்று அவன் சென்றிருக்கக் கூடாது. விசேடங்கள் இட விசேடத்தை மங்கச் செய்யும். பெரிய அரண்மனை போன்ற கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஒரு மூலையில் எங்கேயும் பார்க்காதவாறு உட்கார்ந்து கொண்டிருந்த தாடிக்காரிடம் ஏனோ பேச வேண்டும் போலத் தோன்றிற்று. கேட்ட கேள்விக்கு அவர்தான் இப்படிப் பதில் சொன்னார். காடன் மலையோடு அவனுக்குச் சொந்தம் உண்டென்று பல்லாண்டு காலமாக … Continue reading

மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்-ஆவணப்படம்

எழுத்தாளர் ரவிசுப்ரமணியன் இயக்கத்தில் உருவான மா அரங்கநாதனைப் பற்றிய அரிய ஆவணப்படம், மா அரங்கநாதனின்  தளத்தில் காணக் கிடைக்கிறது. (காண படங்களை சொடுக்கவும்) மா. அரங்கநாதன் ரவிசுப்ரமணியன் Part I Part II Part III Part IV Part V Part VI

மகத்தான ஜலதாரை – மா. அரங்கநாதன்

மேலூர் – கீழுர் என இரண்டாகவிருந்த போதிலும் ஆற்று நாகரீகம் ஏற்பட்ட காலத்திலிருந்தே, அங்கே மக்கள் இயங்க ஆரம்பித்திருக்க வேண்டும். கோவில் நாகரீகமும் தழைத்திருக்கக்கூடும். அந்தக் கரைகளில் யானைகளின் களியாட்டங்களைப் பார்த்துவிட்டு ஒரு கிழவன் கடவுளை அறிந்து கொண்டதாகச் சொல்லித் திரும்பினான். பின்னர் அவன் பெயர் சொல்லிப் பாராட்டி சோறு மட்டும் சாப்பிட்டது அந்த ஊர். இடப் பெயரைக் கொண்டுதாம் அவ்விரண்டும் நின்றன. காலையிலே அந்த சூர்யவொளி மட்டும் கீழுரிலே முதலில் விழுந்து எழும்பிப் பின்னர் மேலூருக்கு … Continue reading

மா.அரங்கநாதன்:முதல் அடி-எஸ்.ரா

    தமிழில் ஆழ்ந்த புலமையும் தீவிர தேடுதலும் கொண்ட மா.அரங்கநாதன், 1950-களில் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். இவரது ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூல் 1983-ல் வெளியாகி, தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை உருவாக்கியது. நாஞ்சில்நாட்டில் பிறந்த இவர், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘முன்றில்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். இவரது வீடு பேறு சிறுகதைத் தொகுப்பும் பறளியாற்று மாந்தர் நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். சிவனொளிபாதம் என்ற புனைபெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ள … Continue reading

>சித்தி – மா. அரங்கநாதன்

> அங்கே மைதானங்கள் குறைவு. அவன் குடிக்கொண்டிருந்த அந்த இடம் காவல் துறைக்குசொந்தமானது. ரொம்ப நேரம் அவனைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த காவல்காரர்ஒருவர் இடையே அவனது ஓட்டத்தை தடை செய்தார். "தம்பி – இங்கே ஓட அனுமதி வாங்கவேண்டும்" என்று கூறி "ஆனாலும் நீ நன்றாக ஓடுகிறாய். முன்னுக்கு வருவாய்" என்றும் சொல்லி சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தார்.   அந்த நாட்டில் விளையாட்டிற்கு அத்தனை மதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் வீரர்களைப் பற்றி தொலைக்காட்சி … Continue reading