>அந்தர நதி ரமேஷ் – பிரேம்

> அந்தர நதி பேரழுகையின் உப்பு நதியில் வழி தவறிச் சேர்ந்த பாய்மரத்தில் நான் இந்தப் பாய்மரம் பல நூற்றாண்டுகளாகக் கரை தொட்டதில்லை என்னைக் கடந்து செல்லும் பறவையே உனது கேவல் எதற்காக தரைதொடாத உனது பயணமே எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய என்னைக் கடந்து செல்லும் பறவையே எனது கால்களுக்குக் கீழேயும் தலைக்கு மேலேயும்  விரிந்து நீளும் நீல நதிகள் யாரின் பேரழுகையில் நாம் மிதந்து செல்கிறோம் நூற்றாண்டுகளாக. ரயில் நிலையத்தில் ரமேஷ் பிரேதன் எனக்குத் … Continue reading

>மூன்று பெர்னார்கள் – பிரேம் – ரமேஷ்

> 1988ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பிற்பகல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், புதுச்சேரி கடற்கரையோர மதுபான விடுதியான கடற்காகத்தில் மேல்மாடியில் பருகி முடிக்கப்படாத இறுதி மிடறு மேசை மீதிருக்க, கூடை வடிவ பிரம்பு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ழான் பெர்னாரின் உயிர் பிரிந்திருந்தது. குழியில் பலகை மீது விழுந்த ஈர மண்ணின் முதல் பிடி ஒலியைத் தொடர்ந்து வெவ்வேறு கைப்பிடி அளவுகளில் ஓசைகள் எழுந்தன. இடையே மண் குவியலில் மண்வெட்டி உரசும் … Continue reading

தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்-ரமேஷ்-பிரேம்

பின் – நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ரமேஷ் – பிரேம். பின் நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். இலக்கிய இரட்டையர்களாகவும் அறியப்படும் இவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளனர். இதுவரை 15 புத்தகங்களும் 4 மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரி அரசின். “கம்பன் புகழ் … Continue reading

கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்.- ரமேஷ் : பிரேம்

ஜூலை-14, 1789 அன்று கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள். 1 தேய்பிறைக்கால நிலாக்களைப் போல உனது தீர்மானங்கள் எப்பொழுதும்  தாமதமாகத்தோன்றுகின்றன. எந்தத் தீர்மானமும் இதுவரை உன்னால் நடைமுறைப்படுத்தப்பட்டதே இல்லை. உனது ஒவ்வொரு எத்தனிப்பும் சற்றுக் கூடுதலாய்க் கரையேறி மணல் தொட்ட அலைகளைப் போல் குமிழ் எழுப்பி மறைந்து போகின்றன. உனது ஒவ்வொரு நெடும் பயணமும் கப்பல்வரைச் சென்று கரை மீண்டுவிடும் பணிப்படகுகளோடு முடிந்து விடுகின்றன. உனது தொடக்கத்திற்கான நீண்ட ஆயத்தங்கள் ஒவ்வொன்றும், இல்லாத ஒரு … Continue reading