மனிதனும் பறவையும்-ராஜமார்த்தாண்டன்

மனிதனும் பறவையும் சாலையோரம் கிடக்கிறது அந்தக் காக்கை அனாதைப் பிணமாக. சற்று முன்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் அதன் மரணம். விபத்தா? எதிரிகளின் தாக்குதலா? இயற்கை மரணமா? எதுவென்று தெரியவில்லை. மரக்கிளைகளில் மதில்சுவர்களில் கரைந்திரங்கல் தெரிவித்து கலைந்து போயிற்று உறவுக்கூட்டம் அனாதையாகக் கிடக்கிறது அது. சற்று முன்னதாக ஏதேனும் வீட்டு வாசலில் அல்லது கொல்லை மரக்கிளையில் உறவின் வருகையறிவித்து அதற்கான உணவை யாசித்திருக்கலாம். செத்துக்கிடந்த எலியை இனத்துடன் சேர்ந்து கொத்திக் குதறியிருக்கலாம். மைனாக் குருவியை விரட்டிச் சென்றிருக்கலாம். கருங்குருவியால் … Continue reading

‘எழுத்து’ முதல் ‘கொல்லிப்பாவை’ வரை-ராஜமார்த்தாண்டன்

கனவுகளும் யதார்த்தமும்: 1970களின் ஆரம்பத்தில் கேரளம் பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் சேரும்வரையிலும் இலக்கியப் பத்திரிகைகள் என்றால் எனக்குக் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், கல்கண்டு என்பவைதான். இலக்கியப் படைப்பாளிகள் என்றால் அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், தமிழ்வாணன் போன்றவர்கள்தான். தி. ஜானகிராமனும் ஜெயகாந்தனும் கல்கி, ஆனந்த விகடனில் எழுதியதால் ஓரளவு அறிமுகம். எங்கள் பேராசிரியர் ஜேசுதாசன்தான் மணிக்கொடி எழுத்தாளர்கள், எழுத்து, இலக்கிய வட்டம் இதழ்கள் குறித்தும் அறிமுகப்படுத்தினார். … Continue reading

>நிகழாத அற்புதம்- ராஜ மார்த்தாண்டன்

> நிகழாத அற்புதம் சிவராத்திரி நள்ளிரவு ஒளிக்கீற்றொன்று இறங்கிற்று வான்விட்டு திறந்தவெளியில் 16எம்எம்மில் திருவிளையாடல் கண்டு பரவசத்தில் உறைந்திருந்த மக்கள் ஏவுகணையோ ஏதோவென்றஞ்சி அலறி ஓடினர் வெடியோசை கேட்டதும் சிதறிப் பறக்கும் கொக்குகளாக குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறுமாய்ச் சுற்றிலும் நோக்கினார் சிவனார் வண்ணத்திரையில் சிவாஜியின் சிம்மகர்ஜனை நிசப்தத்தை நடுங்கவைத்தது பக்தர்கள் எங்கே? துறுதுறுத்த கையை மார்போடணைத்துக்கொண்டார் குமிண்சிரிப்பு மறைந்து ஏமாற்றத்தில் இருண்டது முகம் மறுகணம் நிசப்தமான வெடிச்சிரிப்பு … Continue reading