அப்பாவைப் புனிதப்படுத்துதல்-லஷ்மி மணிவண்ணன்

    அப்பாவைப் புனிதப்படுத்துதல் அப்பாவின் நண்பர்கள் ஊடகங்களில் வருகிறார்கள் திரைப்படங்களில் நடிக்கிறார்கள் அம்மாவின் திகைப்பான கண்கள் வழியே சிறுவன் பார்க்கிறான் அப்பாவின் உறவினர்கள் பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள் பதவிகளிலிருக்கிறார்கள் நிறுவனங்கள் இயக்குகிறார்கள் சிறுமி கேள்விப்படுகிறாள் அப்பா அன்புள்ளவரா சொல்லத் தெரியாது பண்புள்ளவரா இல்லை வீதிகளில் சண்டையிட்டு வீட்டுக்கு வருபவர் வீட்டில் சண்டையிட்டு வீதிகளில் நுழைபவர் அப்பா எப்போது வீட்டுக்கு வருவார் தெரியாது எப்போது வெளியிலிருப்பார் தெரியாது கைகால் ஒடிந்தால் மருத்துவமனை கலவரமென்றால் காவல்நிலையம் மதிப்பெண் பட்டியலைச் சரிபார்க்கமாட்டார் … Continue reading