’கங்கா’ முன்னுரை – லா.ச.ராமாமிருதம்

என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் ‘கோவில்மாடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்.”ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டே இருப்பார்,சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்க வேண்டும். பிறகு நாளோ,மாதமோ, வருடமோ தடைப்பட்ட சொல் தட்டியபின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு! கோவில் மாடு! இப்படியே இவர் காலத்தைத் … Continue reading

அபூர்வ ராகம் – லா.ச. ராமாமிருதம்

 வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள். இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி கோட்டையைப் பிடித்து ராஜகுமாரியை பரிசிலாய் மணந்த ராஜகுமாரனைப்போல் நான் அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள் முன்னதாகவே வந்து நடத்தி வைத்த முகூர்த்தத்தில் மணந்து கொண்டவர்கள்தாம். ஆகையால் இறுதி செய்யாத செயலையோ,நம்பாத விஷயங்களையோ … Continue reading

ராஜகுமாரி-லா.ச.ரா

நிழல்கள் நீளத் தொடங்கிவிட்டன. பொழுதின் உருவச் சோதனைகளாய் வானத்தில் வண்ணங்கள் குமைகின்றன. கோணக்கிழக்கில் அடிவானத் திருப்பத்தில் தோன்றியிருக்கும் நீலச் சிரிப்பின் குறுக்கே பக்ஷிகள் மூன்று கோலப் புள்ளிகள் போலும் ஒரே அச்சில் பறக்கின்றன. அந்தரத்தில் கூடு கட்ட இடந்தேடுகின்றனவா? தொடுவானிற்கும் பூமிக்கும் பாலம் விழுந்த ஒளி தூலத்தின் குழல்   வழி வர்ணங்கள் விதவிதமாய்ப் பெய்கின்றன. எதிரிலிருந்து எதில்? வானத்திலிருந்து பூமிக்கா? பூமியிலிருந்து வானிற்கா என்றுதான் புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. சாயும் பொழுதில் தோயும் வண்ணக் குழைவில் … Continue reading

சிந்தாநதி – லா.ச. ராமாமிருதம்

1967/68 நாகர்கோவிலில் ஒரு நண்பர் வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில் ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களிலும் அவரை சந்தித்ததோடு எங்கள் பரிச்சயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோஜம் எங்களுக்கிடையே இடறிற்று. ஆனால் நண்பரின் தாயாரை சந்திக்கும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. அந்த அம்மா என் நாவல் “புத்ர“ வைப் படித்திருந்தார் என்று சொன்னால் மட்டும் போதாது. ஆங்காங்கே வாக்கியங்களை ஒப்பித்து … Continue reading

பிம்பம் – லா.ச.ராமாமிருதம்

மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் –  பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான். ‘ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!’ அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன. கன்னங்கள் கருங்குழம்பு. “நான் எதிரே பார்த்துண்டு வரல்லே’’.  அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது.  “எதிரே … Continue reading

“நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்" – லா.ச.ரா- நேர்காணல்

‘லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் “நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்”   சந்திப்பு: தளவாய் சுந்தரம் படங்கள்: புதூர் சரவணன் 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிருந்த ஒரு பிற்பகலில், அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் லா.ச.ராமாமிருதத்தின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டதும், சாலையைப் பார்த்து திறந்திருந்த அவருடைய அறைக்கு அழைத்து சென்றார். பார்ப்பதற்கு குழந்தைமைக்குத் திரும்பிவிட்ட வயதானவர்களைப் போல் இருந்தார் லா.ச.ரா. கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது, ஞாபக  … Continue reading

பாற்கடல் – லா.ச. ராமாமிர்தம்

நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே … Continue reading

பச்சைக் கனவு – லா.ச.ராமாமிர்தம்

முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு … Continue reading

>லா.ச.ரா. என்றொரு மனவெளிக் கலைஞன் -வண்ணநிலவன்

> வண்ணநிலவன் அஞ்சலி: லா.ச. ராமாமிர்தம் (30.10.1916 – 30.10.2007) மணிக்கொடி காலத்தின் எஞ்சிய ஒரேயொரு நட்சத்திரமும் உதிர்ந்துவிட்டது. ‘லா.ச.ரா.’ என்று இலக்கிய உலகம் பிரியமாக அழைத்துவந்த லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் மறைந்துவிட்டார். அது ஒரு யுகம். அந்த யுகத்தின் கடைசி மூச்சும் இதோ ஒடுங்கிவிட்டது. புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., ந. பிச்ச மூர்த்தி, சிட்டி, சி.சு.செல்லப்பா, பி.எஸ். ராமையா, எம்.வி.வி. என்ற அந்த இலக்கியப் பாரம்பரியத்தின் எஞ்சியிருந்த விழுதுகளில் ஒன்று லா.ச.ரா. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் … Continue reading

இவளோ ? – லா.ச.ராமாமிருதம்

லா.ச.ராமாமிருதம் மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின. சென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர்வையும் மறந்தது. ஆனால் வெய்யிலை மறக்க நான் இங்கு வரவில்லை. உத்யோகம் புருஷ லட்சணம். ‘ராமாமிருதம், உமக்கு மேற்பதவி வேணுமானால் இனி சென்னையில் இல்லை. நீர்  வெளியூரு போகவேண்டியதுதான். நான் சொல்லவில்லை. இது உங்கள் சங்கத்தின் தீர்ப்பு. இருபத்துமூன்று வருடங்களாய் உயர உயர இதே ஆபீசில் இருந்துவிட்டார்களாம். உங்கள் சங்கத்திற்குக் … Continue reading