வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி

இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும். வண்ணதாசனின் உலகம் புறப் பார்வையில் எப்போதும் நம் முன் சதா விழுந்து கொண்டிருக்கும் சாதாரண உலகம். டவுன் பஸ், டாக்சி ஸ்டாண்ட், … Continue reading

சாரல் விருது 2012

  ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது.     வண்ணநிலவன் வண்ணதாசன்    வண்ணதாசன்  படைப்புகள் சில வண்ணநிலவன்  படைப்புகள் சில

போய்க் கொண்டிருப்பவள்-வண்ணதாசன்

கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜூடி வீடு வந்து விடும். மூன்றாவது தடவையோ, நான்காவது தடவையோ இந்த ஊருக்கு வருகிற சமயம் வந்து எட்டிப் பார்க்கிற எனக்கே எப்படியோ அருவருப்பாக இருக்க, அதென்னவோ ஒரு காம்பவுண்ட் சுவர் மாதிரி நொதித்துக் கிடக்கிற சாக்கடை பற்றிக் கவலையற்று இந்த வீட்டுக்காரர்கள் நடமாடுகிறார்கள். இரண்டு மூன்று முட்டைத் தோடு, இப்போதுதான் எறியப்பட்ட பளீர் … Continue reading

நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும்- வண்ணதாசன்

பிச்சு கூரையில் அந்த முகத்தையே தேடிக்கொண்டிருந்தான். ரொம்பவும் தனித்துப் போகிறபோது அவனுக்கு அந்த முகம் தேவைப்படும். கூரையில் குறுக்கு வாட்டாகக் குத்தியிருந்த நீளமான உத்தரக்கட்டைகளில், இவன் கீழே படுத்துக் கொண்டு பார்த்தால் நேர் எதிரே, முறுகித் தொங்கிக் கொண்டிருக்கிற பல்பிற்கு ரெண்டு ஜான் தள்ளின தூரத்தில் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் கோமாளி முகம் மாதிரி ஒன்று தெரியும். விழுந்து விழுந்து சிரிக்கும். வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கும். வயிற்றுக்குக் கீழே திபுதிபுவென்று அடித்துக்கொண்டு சிரிக்கும், ஒரு பழந்துணியை … Continue reading

போர்த்திக் கொள்ளுதல்-வண்ணதாசன்

கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற கைலியையோ போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு போர்வை எப்படியாவது இந்த மாதம் வாங்கிவிட வேண்டும் என்று சரசு நினைப்பாள். ராத்திரி படுக்கும்வரை படித்துக் கவிழ்ந்து வைத்த வாரப் பத்திரிகையையும் கண்ணாடியையும் எடுத்து ஜன்னலில் வைத்த கையோடு அவனை எழுப்பி நேரே ஒரு போர்வை வாங்கிக் கொண்டுவரச் சொல்லத் தோன்றும். ஆனால் அவனுக்கு இப்படியெல்லாம் உடனுக்குடன் வாங்குகிற … Continue reading

>வண்ணதாசன்:உள்ளங்கை எழுத்து-எஸ்.ரா

> உள்ளங்கை எழுத்து கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் ஞானி-கேணி: டிசம்பர் 12 ஞாயிறு மாலை 4 மணி. எழுத்தாளர் வண்ணதாசன் . இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர், சென்னை நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான எஸ்.கல்யாணசுந்தரம் என்ற வண்ணதாசன், ‘தீபம்’ இதழில் எழுதத் துவங்கியவர். திருநெல்வேலிக்காரர். 1962\ல் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதையுலகம் ப்ரியமும் கருணையும் நிரம்பியது. சகமனிதர்களின் மீதான அன்பும், … Continue reading

>ஒட்டுதல்-வண்ணதாசன்

> குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அம்மா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். செஞ்சுதான் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘எங்கே போகப் போகிறாள். ஏற்கனவே பார்த்த ஆபீஸ். ஏற்கனவே பார்த்த வேலை ‘ என்று என்னென்னவோ சொல்வது கேட்டது. துவைத்த உடைகளையும் வாளியையும் வைத்த கையோடு எப்போதும்போல அடுக்களையின் ஒரு பகுதியாக இருக்கிற பூஜை அலமாரியின் பக்கம் வந்து நின்றாள். எல்லாச் சாமி … Continue reading

>இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி

> இன்னொரு கேலிசித்திரம் காலம் என் கேலிச்சித்திரத்தை வரைந்துவிட்டது உயரத்தையும் முன்பற்க்களின் இடைவெளியையும்  நிச்சயம் கணக்கில் எடுக்கும் என்று நினைத்திருந்தேன் எடுக்கவில்லை என் கூர்மையற்ற மூக்கைக்கூட அது பொருட்படுத்தக் காணோம் கனத்த கண்ணாடியின்றியும் முகத்தின் சாயல் பிடிப்பட்டிருந்தது அதன் கோடுகளுக்குள் என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன என் சித்திரத்தை விட என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது எனினும் என்னுடைய எந்த அடையாளத்தை அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம் என்ற புதிரை என்னால் விடுவிக்க முடியவில்லை அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது அடுத்த … Continue reading

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்-வண்ணதாசன்

‘சங்கர நாராயணன் வீடு இதுதானே ‘ என்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது. இதுவரை பார்த்திராத ஒரு சின்ன அளவில், மட்டமான ஒரு பச்சை வண்ணம் அடிக்கப்பட்டதாக, நீலப் பூக்கள் நான்கு முனைகளிலும் வரையப்பட்டு அந்த பெட்டி இருந்தது. அவர் யாரைப் போலவும் இருந்ததாக யோசித்துக் கொள்ளமுடியும். ரயில் பெட்டியின் நெரிசலில் தூங்கிக் கொண்டே எதிரே வருகிறவர். சாராயக் கடை வாசலில் மேலும் குடிப்பதற்கு காசின்றி நிற்பவர். கல்யாணப் பந்தியில் … Continue reading

>நிலை – வண்ணதாசன்

> ‘தேர் எங்கே ஆச்சி வருது?’ ‘வீட்டைப் பார்த்துக்கோ.’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் புறப்பட்டு போகும்போது கோமு கேட்டாள். ’வாகையடி முக்குத் திரும்பிட்டுதாம். பார்த்திட்டு வந்திருதோம். நீ எங்கியும் விளையாட்டுப் போக்கில் வெளியே போயிராத, என்ன?’ அழிக்கதவைச் சாத்திவிட்டு எல்லோரும் வெளியே போனபோது கோமு அவர்களைப் பார்த்துக் கொண்டு உள்ளேயே நின்றாள். கம்பிக் கதவிற்கு வெளியே ஒவ்வொருவராக நகர்ந்து நகர்ந்து, தெருப்பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். முடுக்கு வழியாக, இங்கிருந்து தெருவைப் பார்க்க முடியாது. தெருவைப் பார்க்கவே இன்றைக்கு ரொம்ப … Continue reading