>வல்லிக்கண்ணன் நினைவில்…-வெங்கட் சாமிநாதன்

> வல்லிக்கண்ணன் மறைந்து விட்டார். எந்த இழப்பும் மன வேதனை தருவது தான். நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவது தான். எந்த இழப்புக்கும் நாம் தயாரில்லை. மனித மனத்தின் இயல்பு அது. 85-86 வருடங்கள் வாழ்ந்த மனிதர், நம்மிடையே தம் இருப்பை, பரிச்சய உலகத்திலும் இலக்கிய உலகத்திலும் உணர்த்திக் கொண்டே இருந்தவர். அதுவும் எவ்வளவு காலம்! மூன்று  தலைமுறைக்கும் மேல் நீண்டது அது. அவ்வளவு நீண்ட காலமும் படிப்பதற்கும் எழுதுவற்கும் தான் என்று ஒரு தீர்மானத்தைத் தனக்குள் தன் … Continue reading

>பேரிழப்பு – வல்லிக்கண்ணன்

> வல்லிக்கண்ணன் ‘இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய் விடவேண்டியது தான்!’ இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற்றியது. இவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அல்ல, முப்பதாயிரத்து ஓராவது தடவையாகவே இருக்கலாம்! பூவுலிங்கம் பட்டணத்துக்கு வந்து முப்பது வருஷங் கள் ஓடிவிட்டன. அவர் வந்த நாளிலிருந்து ‘ஊருக்கு ஒரு தரமாவது போயிட்டு வரணும்’ என்கிற ஆசையும் அவரது உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டது. அப்படி முப்பது வருஷ காலமாக … Continue reading

மதிப்பு மிகுந்த மலர்-வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன் மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார். நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன. … Continue reading