சென்று தேய்ந்து இறுதல்-விக்ரமாதித்யன் நம்பி

சென்று தேய்ந்து இறுதல் இது என்ன இது என்னது இது குகை மனிதனொப்ப வேட்டையாடித் திரிவது ஆதிவாசிக்கும் நமக்கும் என்ன பெரிய வித்யாசம் இரை தேடித் தின்பது தூங்குவது   புணர்வது கேளிக்கையும் கொண்டாட்டமுமாய் காலம்கழிப்பது பின்னே சலித்துக்கொள்வது எவ்வளவு இனிய உலகம் இது கவிதை சங்கீதம் நாட்டியம் பாட்டு பறவைகள் வானம் காற்று மழை தொன்மக்கதைகள் சிறப்பைச் சிந்திக்கொண்டிருக்கும் பெண்கள் எதிலும் முழுசாய் லயிக்க முடியாமல் எப்பொழுதும் இரைதேடிக் கொண்டும் இருப்பு பற்றி யோசித்தபடியும் என்ன இது … Continue reading

தக்ஷ்ணாமூர்த்தியான..-விக்ரமாதித்யன் நம்பி

    தக்ஷ்ணாமூர்த்தியான… மாமிசம் தின்னாமல் சுருட்டுப் பிடிக்காமல் பட்டை யடிக்காமல் படையல் கேட்காமல் உக்ரம் கொண்டு சன்னதம் வந்தாடும் துடியான கருப்பசாமி இடையில் நெடுங்காலம் கொடைவராதது பொறாமல் பதினெட்டாம்படி விட்டிறங்கி ஊர்ஊராகச் சுற்றியலைந்து மனிதரும் வாழ்க்கையும் உலகமும் கண்டு தேறி அமைதி கவிய திரும்பி வந்தமரும் கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும் எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும் வீடு வீடு பத்திரமான இடம் “புலிப்பால் கொண்டு வரப் போனான் ஐயப்பன்“ புத்தி வளர பேச்சு குறைய அந்தம் கண்டது … Continue reading

>பொருள்வயின் பிரிவு –விக்ரமாதித்யன் நம்பி

> பொருள்வயின் பிரிவு அன்றைக்கு அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை. நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது சாரல் மழைபெய்து சுகமான குளிர் வியாபித்திருந்தது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன் அரவம் கேட்டு விழித்த சின்னவன் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள் இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள் வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தாள் தாய்போல முதல் பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம் பிழைப்புக்காக பிரிந்து வந்துகொண்டிருந்தேன் மனசு கிடந்து அடித்துக்கொள்ள. **** கூண்டுப் புலிகள் நன்றாகவே … Continue reading

>இலக்கில்லாத பயணம்-வித்யாஷ‌ங்கர்

> விக்ரமாதித்யன் (விளக்கு விருது விழாவிற்காக தயாரிக்கப்பட்டு படிக்கப்படாத கட்டுரை) இலக்கில்லாத பயணம்     ஒரு மரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பார்க்கிறோம். அதன் உச்சியில் நின்றுபார்ப்பவருக்கு அதன் விஸ்தீரணமும் உயரமும் பெருங்கிளைகளும் பூக்களும், கனிகளும் வியப்பாக இருக்கும். அதன் நிழலிருந்து பார்ப்பவருக்கு வேறாகவும், அதன் கனியை ருசித்தவருக்கு வேறாகவும் மரம் தோற்றமளிக்கும். விக்ரமாதித்யன் என்ற பெருமரத்தின் நிழலை அனுபவித்திருக்கிறேன். பூவை ரசித்திருக்கிறேன். கனியை ருசித்திருக்கிறேன் கோபத்தில் கிளைகளை வெட்டி ஏறிந்து காயப்படுத்தி இருக்கிறேன்     ஆனாலும் … Continue reading

>விக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் – ஷங்கர்ராமசுப்ரமணியன்

> விக்ரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டபோது படிக்கப்பட்ட கட்டுரை : ஷங்கர்ராமசுப்ரமணியன் ஓம் அது குறைந்திருக்கிறது இது குறைந்திருக்கிறது குறைவு குறைவினின்று எழுகிறது குறைவினின்று குறைவு எடுத்து குறைவே எஞ்சுகிறது ஓம் அசாந்தி அசாந்தி அசாந்தி இந்த உலகில் பிறக்கும் மனிதஉயிர், மரணிக்கும் வரை தன்னை பின்னமாகவும் அபூர்ணமாகவும்  கருதிக்கொள்கிறது. இயற்கையிலிருந்தும் இறைமையிலிருந்தும் ஒரு மனிதன் அல்லது மனுஷி தன்னைப் பிரித்துணரும் நாளிலிருந்து அவனது அவளது தனிமையும் மீட்சிக்கான தேடுதலும்  ஆரம்பமாகிறது. அப்போதிருந்துதான் முழுமையை நோக்கிய பிரார்த்தனையும் … Continue reading

>நான்கு கவிதைகள்-விக்ரமாதித்யன் நம்பி

>       1 சிறு தெய்வங்களை சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம் பெருந் தெய்வம்தான் பிடிகொடுத்துத் தொலைக்காது 2 முந்தாவிட்டால் ஒன்றும் மோசமில்லை பிந்திவிட்டாலோ பெரும்பாதகம் வந்துவிடும் 3 செடிகள் வளர்கின்றன குழந்தைகள் வளர்கிறார்கள் எனில் மரங்களுக்கு வருவதில்லை மனநோய் 4 பறவைகள் பறக்கும் ஆகாயத்தில் புழுக்கள் வளரும் பூமியில் மானுடம் மட்டும் மயங்கும் இடம் தெரியாமல்.

>வண்ணநிலவனின் ‘எஸ்தர் ‘ இலக்கிய அனுபவம் -விக்ரமாதித்யன்

> தமிழில் நிறையவே சிறுகதைகள் வருகின்றன. இப்படிச்சொல்வது பத்திரிக்கைக் கதைகளை மனதில் கொண்டு இல்லை. இலக்கிய சிறுகதைகளையே குறிப்பிடுவதாம். இவ்வளவு காலத்துக்குப் பிறகு, நமது இலக்கிய சஞ்சிகைகளில் சம்பவக் கதைகள், நடைச் சித்திரக் கதைகள், இந்த இடத்தில் தொடங்கி இந்த இடத்தில் முடிகிற கதைகள், ஓ ஹென்றி முடிவுக் கதைகள், வட்டார இலக்கிய பம்மாத்துக் கதைகள், ஐரோப்பிய இலக்கியப் பாதிப்புக் கதைகள்,  (இப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கப் பாதிப்புக் கதைகளுக்குத் தான் மவுசு) உள்ளூர் பாதிப்புக் கதைகள், போலி … Continue reading

>இவ்வாறாக- விக்ரமாதித்யன்

> இவ்வாறாக அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ஆதரவாயிருக்கும் அம்மாவை ஐயோ பாவம் தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் ஆயிரத்தோரு சண்டைகளுக்கு அப்புறமும் அப்பா காட்டும் அக்கறையை அன்புக்கு நேர்வதெல்லாம் துன்பம்தானென்று விட்டுவிடலாம் மார்பில் முகம்புதைத்து மனைவி கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழியாக மெளனத்தை விட்டுவிடலாம் காலைக்கட்டி மயக்கும் குழந்தைகளை கடவுளின் அற்புதங்களை நம்பி சும்மா விட்டுவிடலாம் முதுகுக்குப் பின் புறம்பேசித் திரிகிற நண்பர்களின் குணத்தை மன்னித்து மறந்துவிட்டு விடலாம் வேண்டியவர்களின் யோசனைகள் வேண்டாதவர்களின் கேவலப்படுத்தல்கள் இரண்டுமே விதியின் முன்புக்கு வீணென்று விட்டுவிடலாம் … Continue reading

>சருகுத் தோட்டம்-விக்ரமாதித்யன்

> முன்னொருகாலத்தில் அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் அரண்மனையில் ஒரு பெரிய தோட்டம் போட்டிருந்தான். தோட்டக்காரர்களை அமர்த்திப் பூஞ்செடிகள், மலர்க்கொடிகளெல்லாம் நட்டு வளர்த்திருந்தான். பழமரங்கள் நிறைய வைத்திருந்தான். தனது தோட்டத்தைப்பற்றி அவன் மிகவும் பெருமை கொண்டிருந்தான். அரண்மனைக்கு யார்வந்தாலும் முதலில் அவர்கலைத் தோட்டத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு போய்க் காண்பிப்பான். அது அவனுக்கு சந்தோஷமான காரியம். ஒரு நாள் சாது ஒருவர் அரண்மனைக்கு வந்திருந்தார். அரசன் அவரை அன்புடன் வரவேற்று உபசாரம் செய்தான். தோட்டத்தை வந்து பார்க்கும்படி … Continue reading

>மாயக்கவிதை-விக்ரமாதித்யன்

> விக்ரமாதித்யன் கவிதை என்பது மாயம். மொழியில் கட்டப்படுகிற மாயம். கவிஞன் என்பவன் மாயக்காரன். நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன். தமிழின் நல்ல கவிஞர்களாக விளங்குகிற எல்லோருடைய கவிதைகளிலும் இந்த மாயத்தன்மையைக் காணலாம். இவர்களின் நல்லகவிதைகளெல்லாம் எப்படி நல்ல கவிதைகளாக இருக்கின்றன என்று கேட்டால் இந்த மாயத்தன்மையைத்தான் சுட்டமுடியும். கவிஞன் எவ்விதம் மாயத்தைக் கட்டுகிறான். அது அவனுக்கே தெரியாத காரியம். கவிதைகளின் இந்த மாயத்தன்மைதான் அவற்றின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் முழுமுதல் காரணமாகிறது. மாயக்காரனுக்கே மாயம்( கவிதை ) … Continue reading