வலி – விமலாதித்த மாமல்லன்

சாயங்காலம் ஊருக்குப் போகிறோம் என்று அப்பா சொன்னவுடன் அப்புட்டாவுக்கு நிலைகொள்ளவில்லை. கதவுக்குப் பின்னால் இருந்து துணிக்கம்பை எடுத்தான். இரண்டு சட்டைகளைக் கொடியிலிருந்து எடுத்து ஒரு பக்கமாக மடித்து வைத்தான். கால் சட்டைகளைத் தேடினான். கொடியில் ஒன்று காயாமல் இருந்தது. கொடியின் இன்னொரு கோடியில் இருந்த அம்மாவின் புடவையை விலக்கினான். உள்ளே ஒன்று இருந்தது அதை எடுத்தான். அதற்கு பட்டன்கள் அறுந்து போய்விட்டிருந்தது. கொஞ்சம் தயக்கத்துக்குப் பின்னர் அதையும் சட்டைகளுடன் வைத்துவிட்டு வெளியில் ஓடினான். எதிர்வீட்டுக் கதவு மூடியிருந்தது. … Continue reading

சிறுமி கொண்டுவந்த மலர் – விமலாதித்த மாமல்லன்

இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறித்த பார்வையுடன் படுக்கையிலேயே உட்கார்ந்திருந்தார். காலி டபராசெட் எதிரிலிருந்தது. ஆனால் வேறு யாரோ காபி குடித்ததுபோன்ற பிரமையே அவருக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே ஒன்றும் புரிபடவில்லை. தலைக்கு நாள் மதியத்திலிருந்து இப்போது படுக்கையில் இப்படி உட்காந்திருப்பது வரை, அனைத்தும் நாட்டுப்புறக்  கட்டுக்கதைகளில் சொல்லப்படுவது போலவே நடந்தேறியிருப்பதாகத் தோன்றியது அவருக்கு. XXX முன்தினம் பகல் உணவை முடித்துக்கொண்டு கடைக்கு … Continue reading

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்-விமலாதித்த மாமல்லன்

மாம்பலத்தில் பழைய பேப்பர் மற்றும் முட்டை வியாபாரம் செய்கிற நாடார் எனக்குப் பழக்கம். முட்டைக்கும் பழைய பேப்பருக்கும் அப்படி என்ன விநோதத் தொடர்பென்று இன்றுவரை எவ்வளவு யோசித்துப் பார்த்தும் எனக்குப் பிடிபடவில்லை, முன்னதைப் பின்னதில் பொட்டலம் கட்டலாம் என்பதைத் தவிர. நாடார் எனக்கு நல்ல நண்பர். அவசரப்பட்டு யாரும் அடிக்க வரவேண்டாம். முதல் விஷயம் இந்தக் கதை நாடார் கதை அல்ல. இரண்டாவதாக நாடாரே என நானும் ஐயிரே என அவரும் விளித்து ஜாதீய மற்றும் தேசீய … Continue reading

>விமலாதித்த மாமல்லனின் சிறுகதைகள்-ஆத்மாநாம்

> இன்றைக்கு எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுகதைக்கு அறிமுகமாயிருக்க வேண்டும். அந்த அளவுக்கு பெரும்பத்திரிகைகள் கவர்ச்சி அரசியல் சினிமா மதம் மற்ற மசாலா அம்சங்களோடு வணிக இலக்கியத்தை காலம் தவறாது ஒரு உபாதையை நீக்கிக்கொள்வதுபோல் செயல் பட்டு வருகின்றன. இந்தப் போக்குகளிலிருந்து விடுபட்டு ஒரு ஈடுபாட்டுடன் கலை இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே. அப்படி உள்ளவர்களுக்கு இலக்கியத்தை செழுமைப்படுத்துவதுதான் முதல் நோக்கமாக இருக்கிறது. அவர்கள் வாழும் ஒவ்வொரு கணத்திலிருந்தும் … Continue reading

>போர்வை-விமலாதித்த மாமல்லன்

> ராவ்ஜி பல் தேய்த்துக் கொண்டிருந்தார். கீழே பத்தர் வீட்டிலிருந்து ‘ஐயோ மாமா’ என்ற பெருத்த அலறல் கேட்டது. ராவ்ஜியை இந்தக் கூக்குரல் கொஞ்சம் அதிகப்படியாகவே திடுக்கிட வைத்து விட்டிருக்க வேண்டும். கையிலிருந்த பிரஷ் தவறிக் கீழே விழுந்துவிட்டது. அதை தரையில் விழுந்து விடாதபடி பிடிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் கைகளிலும் வேஷ்டியிலும் நுரை பூசிக்கொண்டது. பல் தேய்ப்பை அத்துடன்  முடித்துக் கொண்டு அவசரமாய் வாய் கொப்பளித்து சட்டை அணிந்து கொண்டு படிகளில் இறக்கிக் கீழே ஓடினார். … Continue reading

>இலை -விமலாதித்த மாமல்லன்

> கொல்லையில் கறிவேப்பிலை மரம் தளதளவென்று நின்று கொண்டிருந்தது. தெருவிலிருந்து  பார்ப்பவர்கள், அந்த  வீட்டில் அப்படியொரு மரம் இருக்கக்கூடும் என்று யூகிக்க முடியாது. வீட்டிற்கு  ஸ்நோஸிம்  அடித்து  இருந்தது. வீட்டின்  ஒவ்வொரு அங்குலத்தையும், சமைந்திருக்கும்  பெண்ணின்  தாயாரைப்போல, ரொம்ப ஜாக்கிரதையுடன்  கண்காணித்து  வந்தாள்  மாமி. வீட்டின்  வெளிச்சுவரில் போஸ்டர்களை யாரும் ஒட்டிவிடாமல் இருப்பதற்காக கருங்கல் ஜல்லி பதித்து, அதற்குமேல் ஸ்நோஸிம் அடித்துவைத்தாள். தேர்தல் சமயத்தில், மாமியின் பாராவையும் மீறி ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தம் சின்னங்களை  சுவரில்  எழுதிவிட்டார்கள். … Continue reading