>வல்லிக்கண்ணன் நினைவில்…-வெங்கட் சாமிநாதன்

> வல்லிக்கண்ணன் மறைந்து விட்டார். எந்த இழப்பும் மன வேதனை தருவது தான். நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவது தான். எந்த இழப்புக்கும் நாம் தயாரில்லை. மனித மனத்தின் இயல்பு அது. 85-86 வருடங்கள் வாழ்ந்த மனிதர், நம்மிடையே தம் இருப்பை, பரிச்சய உலகத்திலும் இலக்கிய உலகத்திலும் உணர்த்திக் கொண்டே இருந்தவர். அதுவும் எவ்வளவு காலம்! மூன்று  தலைமுறைக்கும் மேல் நீண்டது அது. அவ்வளவு நீண்ட காலமும் படிப்பதற்கும் எழுதுவற்கும் தான் என்று ஒரு தீர்மானத்தைத் தனக்குள் தன் … Continue reading

>இப்படி ஒரு பயணம் சி.மணி-வெங்கட் சாமினாதன்

> இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)   – 17.4.09 சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகிய சிங்கர் தொலை பேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச் சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா – கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின் போது தானே நடக்க … Continue reading

>திலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா

> வெங்கட் சாமினாதன் இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலிப் குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத்தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. … Continue reading

>கரிச்சான் குஞ்சு – தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் சாமினாதன்

> கரிச்சான் குஞ்சுவை எண்பதுகளின் ஆரம்பத்தில் முதன் முதலாகப் பார்த்த போது அவருக்கு அறுபத்து ஐந்து வயதுக்கு மேலிருக்கும். முரண்களின் உருவமாக இருந்தார் அவர். நல்ல கருத்த பருமனான தேகம். நரைத்த சிறிய உச்சிக்குடுமி. மார்பின் குறுக்கே பூணூல். சமஸ்கிருதத்திலும், தமிழிலும் காவியங்களை ஆழ்ந்து படித்தறிந்திருந்த பாண்டித்யம். அன்றைய தமிழ்ச் சூழலில் தன்னை வெகுவாக அன்னியப்படுத்திக் கொள்ளும் தோற்றமும் ஆளுமையும். அன்றென்ன!. இன்றும் தான். அப்போது அவர் தங்கியிருந்த கும்பகோணத்தில் அவரைச் சுற்றிச் சூழ்ந்த மிகச் சிறிய … Continue reading

தோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்

  வெங்கட் சாமினாதன் தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சமீபத்து நிகழ்வுகள் என்று தான் சொல்லவேண்டும். இரண்டும் முரண்பட்டவை. இரண்டு வேறுபட்ட முகங்களைக் காட்டும் நிகழ்வுகள். இவ்விரண்டையும் ஒன்றாக்கிப் பார்க்கச் செய்வது இந்த முரண் நகை தான். ஒன்று, மீனாக்ஷ¢புரம் என்ற கிராமத்தின்  பிற்படுத்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட அந்த கிராம … Continue reading

>மௌனியின் உலகு-வெங்கட் சாமினாதன்

> வெங்கட் சாமினாதன் எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத இந்த எழுத்து மேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல? அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான். பின்னர் அவ்வப்போது எழுதியது நண்பர்களும் மற்ற எழுத்தாளர்களும் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான். மௌனியைத் தமிழகத்துக்குத் திரும்ப நினைவூட்டிய மறைந்தே போன அவர் இடத்தைத் திரும்ப புனர்ஜீவித்த க.நா. சுப்ரமண்யம் 1959-ல் மௌனியின் கதைகளைச் சேகரித்து அவர் … Continue reading