தீராக்குறை- எஸ்.ராமகிருஷ்ணன்

வேல.ராமமூர்த்தி   ராமநாதபுர மாவட்டத்தின் பெருநாழியைச் சேர்ந்தவர் வேல.ராமமூர்த்தி. அவரது  கதைகள் கிழக்குச் சீமையின் அடிநிலை மக்களின் வாழ்வை விவரிப்பவை. ராணுவத்தில் வேலை செய்து ஓய்வு பெற்று, தற்போது தபால்துறையில் பணிபுரிகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள இவர், தனது எழுத்து பேரன்பும் பெருங்கோபமும் நிரம்பியது என்பவர். வேல.ராமமூர்த்தி கதைகள், கூட்டாஞ்சோறு, இருளப்பசாமியும் 21 கிடாயும் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியாகியுள்ளன. திருச்செந்தூரின் வைகாசி விசாகத்தைக் … Continue reading

>இருளப்ப சாமியும் 21 கிடாயும் – வேல.இராமமூர்த்தி

> இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன். ’எளவட்ட … Continue reading