>மங்கயர்க்கரசியின் காதல் -வ.வே.சு. ஐயர்

> வ.வே.சு. ஐயர் சூசிகை குலோத்துங்க சோழனுக்காகக் கலிங்கம் சென்று, வென்று வந்த கருணாகரத் தொண்டைமானுடைய மகளான மங்கையர்க்கரசி என்னும் மங்கை, கருணாகரன் என்னும் வாலிபனைக் காதலிக்கிறாள். அவள் தகப்பன் இறந்துவிட்டதால், அவளுடைய  சிற்றப்பன்தான் தற்காலம் அவள் குடும்பத்துக்குத் தலைவன். அவன் அவளை மார்த்தாண்டன் என்னும் வேறு ஓர் இளைஞனை மணக்கும்படி வற்புறுத்தி வருகிறான். ஆனால் மங்கையர்க்கரசி கருணாகரனையே விவாகம் செய்துகொள்வது என நிச்சயித்துக்கொண்டு அவனை ஒரு நாள் இரவு ஊரின் புறத்திலுள்ள ஒரு காளி கோயிலுக்கு … Continue reading

>வ.வே.சு ஐயர்

> வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்கிற வ.வே.சு. ஐயர் திருச்சி நகருக்கு அருகில் வரகனேரி என்னும் ஊரில் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். 1897-ல் வ.வே.சு. ஐயருக்கும் பாக்கியலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. 1907-ல் பாரிஸ்டர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். 1910-ல் திரும்பி கடல் மார்க்கமாக புதுச்சேரி வந்தார். புதுச்சேரியில் பாரதியார், அரவிந்தர் ஆகியோருடன் ஐயருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தமிழில்  சிறுகதைகளை அதன் வடிவப் பிரக்ஞையுடன் கையாண்ட முதல் எழுத்தாளர் ஐயர்தான். … Continue reading

>குளத்தங்கரை அரசமரம்-வ.வே.சு. ஐயர்

> தமிழில் முதல் சிறுகதை வ.வே.சு. ஐயர்  பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம … Continue reading