மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்-ஜெயமோகன்

ஜெயமோகன் மெளனியும் தமிழிலக்கியs சூழலும் மெளனியின் சிறுகதைகளின் தொகுப்பில் அவரைப்பற்றி புதுமைப்பித்தன் சொன்ன வரிகள் எடுத்து தரப்பட்டுள்ளன. ‘ தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்த்வர் ஒருவரை சொல்லவேண்டுமென்றால் மெளனி என்ற புனைபேரில் எழுதிவருபவரை சொல்லவேண்டும். அவரை தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று சொல்லவேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபடமறுக்கும் கருத்துக்களை மடக்கிக் கொண்டுவரக்கூடியவர் அவர் ஒருவரே ‘ இக்குறிப்பில் மெளனி , சிறுகதையின் திருமூலர், கற்பனையின் எல்லைகோடு ஆகிய சொற்கள் அடிக்கோடிடப்பட்டுள்ளன. மெளனியைப்பற்றி … Continue reading

>கந்தர்வன் – கல் தடம்-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல; அதன் ஊடாக இசையும் கலையும் சிறுவணிகமும், மருத்துவ மும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக் கின்றன. கோயில் ஒரு கூட்டு வெளி. அது யாருமற்றவர்களுக்கான போக்கிட மாகவும், காலத்தின் மாபெரும் சாட்சியாக வும், கோடிக்கோடி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் சமர்ப்பிக்கப் படும் இடமாகவும் இருக்கிறது. ஆனால், பிரார்த்தனை என்பது வெறும் சடங்காகிவிட்ட சூழலில், தெய்வத்தைத் தவிர மற்ற யாவும் கவனிப்பாரற்றுப் போகத் துவங்கி விட்டிருக்கின்றன. ஓதுவார்களின் தேவாரப் பாடலும், … Continue reading

>லா.ச.ராமாமிருதம் தனிமையின் நிறம்-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ். ராமகிருஷ்ணன் குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன். அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் … Continue reading

>கு.ப.ராஜகோபாலன் நினைவு முகம்-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் திருப்பதி செல்லும் ரயிலில் அந்தத் தம்பதியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைக் கடந்த வயது. தாத்தா ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ரயிலில் கூட்டம் இல்லை. அவர் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஆங்கில பேப்பர், பிளாஸ்டிக் கூடையில் செருகப்பட்டிருந்தது. ரயில் வேகமாகக் கடந்து செல்லும்போது, அவர் தொலைவில் உள்ள வயலில் வந்திறங்கும் கொக்குகளைக் காட்ட, ஒரு குழந்தையின் வியப்பில் வெளியே எட்டிப் பார்த்தார் அந்தப் பாட்டி. பயணம் முழுவதும் அவர்கள் தணிவான குரலில் எதையோ பேசிச் … Continue reading

>மௌனி- ஒரு புதிய அலை-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன்  கதாவிலாசம் குளத்தில் எறிந்த கல், தண்ணீரின் மீது தவளை நீந்துவதுபோல சிற்றலையை உருவாக்கிவிட்டு அடியாழத்தில் சென்று நிசப்தமாக மூழ்கிக் கிடக்கத் துவங்கிவிடுகிறது. நல்ல கதைகளும், குளத்தில் எறிந்த கல் போலத்தான் போலும்! அது உருவாக்கும் சிற்றலையின் மடிப்புகள் விசித்திரமாக இருக்கின்றன. ஒரு கல் உருவாக்கும் அலையைப் போன்று இன்னொரு கல் உருவாக்குவதில்லை. ஒவ்வொரு கல்லும் ஒரு புதிய அலை வடிவை உருவாக்குகின்றன. அது தண்ணீரின் மீது கல் நடனமிடும் அரிய தருணம். கல்லூரி நாட்களில் … Continue reading

இழந்த யோகம்-கோபி கிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன் மாரிச்சாமி அந்தப் பெண் — மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான், ‘இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? ‘ என்று. ‘என்ன ? ஒரு நாளைக்கு எத்தனை ஊதுகிறீர்கள் ? ‘ என்றாள் மருத்துவர். ‘ஒரு நாற்பது, நாற்பத்தஞ்சு இருக்கும். ஒன்றையடுத்து இன்னொன்று சங்கிலி மாதிரி ‘ என்று தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டான் மாரிச்சாமி. ‘என்ன செயின் ஸ்மோக்கிங்கா ? … Continue reading

கடவுளின் கடந்த காலம்-கோபி கிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன் திடாரென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டு ஒன்று அவரது இடது தொடைமேல் இருந்தது. அவர் துடித்தார். சற்றுக் கழித்து இரும்புத் துண்டு விலகிற்று. அலறியடித்துக் கொண்டு லுங்கியை விலக்கித் தொடையைக் கவனித்தார். சதை வெந்து ரணமாகியிருந்தது. மருத்துவரிடம் சென்று, களிம்பு ஒன்று தடவியதில் சில தினங்களில் குணமாயிற்று. ஆனால், தீ வடு நிலைத்தது. இரண்டு நாட்கள் கழித்து, வலது தொடைமீது எரிந்து கொண்டிருக்கும் பீடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரம் சென்று பீடி அகன்றது. தீக்காயம் … Continue reading

இதுவும் சாத்தியம்தான்-கோபி கிருஷ்ணன்

கோபிகிருஷ்ணன் முதலில் சிறிது தயங்கினான்; பிறகு சொல்லியேவிட்டான், ‘நீங்கள் வந்த பிறகுதான் மருத்துவமனை கூடுதல் சோபிதத்துடன் துலங்குகிறது. நீங்கள் உண்மையிலேயே மிகவும் அழகாக இருக்கிறீர்கள். என் உளம் நிறைந்த பாராட்டுக்கள். ‘ அவள் ஒரு மென்முறுவல் பூத்து நகர்ந்தாள். பரிச்சயம் வலுப்பட்டது. அடிக்கடி பேசிக் கொண்டார்கள். உணவு இடைவேளையில் ஒன்றாகவே சாப்பிட ஆரம்பித்தார்கள். அவனுக்கு முதலில் சொன்னது போதுமானதாக இல்லை போலும். மீண்டும் ஒரு முறை சொன்னான், ‘உங்கள் வடிவ நேர்த்தி மிகவும் போற்றத்தக்கது. சிருஷ்டியில் நீங்கள் … Continue reading

சமூகப்பணி-கோபி கிருஷ்ணன்

கோபிகிருஷ்ணன். ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா. ‘பேரென்ன ? ‘ ‘சுசீ. ‘ ‘வூட்டுல கூப்புடற செல்லப் பேரெல்லாம் சொல்லக் கூடாது. முழுப் பேரேச் சொல்லுங்க. ‘ ‘சுசீலா தேவி ‘ ‘என்ன சுசீலா தேவி ? ‘ ‘சுசீலா தேவின்னா சுசீலா தேவிதான். ‘ ‘உங்க இனிஷியல் என்னான்னு கேக்குறேன் ‘ ‘ஓ ‘ ஏ ‘ ‘ஓ.ஏ. சுசீலா தேவியா ? ‘ ‘இல்ல இல்ல. ஓ–ன்னது உங்க கேள்வியப் … Continue reading

உறவு, பந்தம், பாசம்…-மெளனி

-மெளனி இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு … Continue reading