>இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி

> இன்னொரு கேலிசித்திரம் காலம் என் கேலிச்சித்திரத்தை வரைந்துவிட்டது உயரத்தையும் முன்பற்க்களின் இடைவெளியையும்  நிச்சயம் கணக்கில் எடுக்கும் என்று நினைத்திருந்தேன் எடுக்கவில்லை என் கூர்மையற்ற மூக்கைக்கூட அது பொருட்படுத்தக் காணோம் கனத்த கண்ணாடியின்றியும் முகத்தின் சாயல் பிடிப்பட்டிருந்தது அதன் கோடுகளுக்குள் என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன என் சித்திரத்தை விட என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது எனினும் என்னுடைய எந்த அடையாளத்தை அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம் என்ற புதிரை என்னால் விடுவிக்க முடியவில்லை அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது அடுத்த … Continue reading

>அந்நியமற்ற நதி-கல்யாண்ஜி

> கல்யாண்ஜி கவிதைகள்   1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன்  தண்ணீர் என் பார்வையை வாங்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்து விட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு உடைந்தது கண்ணாடிக்குளம். நீ வந்திருக்க வேண்டாம் இப்போது. 2.தினசரி வழக்கமாகிவிட்டது தபால்பெட்டியைத் திறந்துபார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைவது. இரண்டு நாட்களாகவே எந்தக் கடிதமும் இல்லாத ஏமாற்றம். இன்று எப்படியோ என்று … Continue reading