>ரத்த சந்தனப் பாவை-என்.டி.ராஜ்குமார்

> இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள் படிக்க நேரிடுமானால் தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும் வெப்புறாளம் வந்து கண்மயங்கும் மூளை கலங்கும் படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று இப்போது என் எழுத்துக்களில் நான் வாதைகளை ஏவி விட்டிருக்கிறேன். ~ முள்மூளையால் ஒளிந்து அடித்ததில் புண்ணாகிப்போன என்னுள் படமெடுத்தாடும் மூர்க்கம் மூளையைச் சொறிந்து புண்ணைப் பெரிதாக்க கொப்பளிக்கும் ரத்தத்தின் வெப்பம் தின்று புடைத்து நிற்கும் நரம்புகளில் பொலபொலவென முளைக்குமென் இரட்டைநாக்குகள் நேரம் பார்த்து நிற்கும் தீயெனச் சுழன்று கழிவிரக்கம்பேசி எவரின் அன்பையும் … Continue reading

>கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

> லேட்டி பொன்னுமக்கா முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ… அயித்தம் பாப்பாங்க நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ. ஏமாத்திம்மா….. அடியேன் வந்திருக்கேன் கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும் கிட்டியாலே போதும் மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி  கொண்டு தட்டுவா விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம். சட்டிப்பான கழுவணுமெங்கிலும் எல்லாத்துக்கும் வாற வழியதுதான் ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ சத்தமிட்டு சிரிக்கப்பிடாது. ஏமான தொடப்பிடாது தண்ணிகொண்டு … Continue reading