நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன். ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகள், எட்டிலிருந்து பன்னிரண்டு வயதிற்குள்ளான மூவர் – சிறுமி, இரண்டு சிறுவர்கள் – அவன் மடிமீது புரளவும் விளையாட்டின்   … Continue reading

சுகுமாரன் – நேர்காணல்

துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம் சந்திப்பு: பெருமாள்முருகன் சுகுமாரன் (11.06.1957): நவீனத் தமிழ்க் கவிதை ஆளுமைகளுள் முக்கியமானவர். எளிமையும் செறிவும் கொண்ட இவர் கவிதைகள் படிமம், உவமை, சொற்சேர்க்கை ஆகியவற்றில் தனித்துவம் மிக்கவை. வடிவம், சொல்முறை ஆகியவற்றில் வெவ்வேறு விதங்களைக் கையாண்டு புதுமைசெய்தவர். அரசியல் சார்ந்த விஷயங்களையும் கவித்துவத்தோடும் சுயபார்வையோடும் கவிதைக்குள் கொண்டுவந்தவர். சுயவிமர்சனத்தைக் கறாராக வைத்துக்கொண்டிருப்பவர். இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை இவரது முப்பெரும் காதல்கள். சிறுகதைகளும் எழுதியுள்ளார். சமீப காலமாக இவர் எழுதிவரும் கட்டுரைகள் … Continue reading

>சந்நியாசி கரடு- பெருமாள்முருகன் கவிதைகள்

> குவிந்த கை மூக்கால் ஆனவன் அவன் வாசனை பிடிக்குமானால் முகம் மலர்ந்து உள்ளிழுத்து நுகர்ந்து ஆசையாய் அவனே சாப்பிட்டுக்கொள்வான் பிடிக்காதபோது என் கை தேவைப்படும் என் விரல்கள் அவ்வுணவில் கலந்துவிடும் பிரியத்தால் சுவை மாறிவிடுமா நினைந்தூட்டும் தாய் முலைபோல விரல்கள் குவித்துச்  சோறூட்டி ஊட்டித் திரும்புகிறது கை எதையாவது கதைபோலச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் அவன் குரலுக்குக் காதுகளை முழுதாகக் கொடுத்துவிட வேண்டும் வெளியே கரையும் காக்கையின் அழைப்புக்குக்கூடக் கவனம் போகக்கூடாது உதிர்ந்த பிஞ்சாய் வதங்கிப்போகும் அவன் … Continue reading

>ஏவாரி – பெருமாள் முருகன்

> பெருமாள் முருகன் என்னக்கா அடுப்புல பொவையுது ? ‘ ‘காப்பித்தண்ணி வாத்தியாரு ‘ ‘அப்படியே எனக்கும் ஒரு கிளாசு குடுக்கா ‘ ‘கட்டல்ல உக்காரு வாரேன் ‘ ‘பாலூத்தீட்டு வந்தாச்சா ? ‘ ‘இப்பத்தான் வந்தன். எந்தப் பாலிருக்குது. சனியனுவ ஆனையாட்டம் தீனிதான் திங்குவ. குர்குர்ரென்னு கறக்குதா. இந்த ஈத்தோட எருமய வித்துப்புடறேன் ‘ ‘ஆமா. வித்துப்புட்டு வேறொண்ணு நல்லதா வாங்கிக்குங்க…. அட அட… வெள்ளாட்டுக்குட்டி ஊட்டுக்குள்ள போவுது பாருக்கா. ‘ ‘உஸ்… உஸாய்… இதுவ … Continue reading

>பெருவழி-பெருமாள்முருகன்

> பெருமாள்முருகன் பூபதி இரவு வெகுநேரம் கழித்துத் தன் அறைக்கு வந்து கதவைத் திறந்தபோது, மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பது துலங்கிற்று. விரித்தபடி கிடந்த பாயில் தடாரென்று விழுந்தான். விடிவிளக்கு வெளிச்சத்தில் தென்பட்ட அறை அவனுக்குச் சந்தோசம் கொடுத்தது. மண்ணெண்ணெய் ஸ்டவ்வும் பாத்திரங்களும் ஒரு பகுதியில் பரவிக் கிடந்தன. பாத்திரங்களிலிருந்து கமழ்ந்த புளித்தவாடை அறை முழுக்க வீசிக்கொண்டிருந்தது. அழுக்குத் துணிகளும் புத்தகங்களும் இறைந்திருந்தன. கடந்த ஒருவார காலமும் எத்தனை நாற்றம் மிக்கதாயிருந்தது, அது உற்பத்தி செய்த அழுக்குகள் … Continue reading