ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும் – நகுலன்

என் அறையில் இருந்தேன்.  அந்த எட்டு வயதுக் குழந்தை வந்தது.  அதன் தாய்மொழி மலையாளம்.  அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது.  கறுப்பிலும் கறுப்பு.  அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைப்பார்கள். கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ?” சிறிது நேரம் சென்றபின், “மாமாவிடமிருந்து ஒரு புத்தகம் கொடுத்தால் போதும்.  விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றது. நான் நேரம் சிறிது சென்றபின் … Continue reading

பிரம்மராஜன் கவிதைகள்-நகுலன்

அப்படித்தான் தோன்றுகிறது: பழகிப் பழகி நைந்துபோன விஷயங்கள் சிந்தையில் கவ்விப் பிடிப்பதில்லை. பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று யந்திர ரீதியில் இழுத்துப் பார்ப்பது போல் பழக்கங்களின் பிடியிலிருந்து மாறுகையில்தான் சிந்தனை தீவிரமாக இயங்குகிறது. பிரக்ஞை சிலிர்க்கிறது; ஒரு புதிய மரபின் தொடக்கம்; பிறகு மீண்டும் பழைய கதை; பூட்டிய பூட்டைப் பூட்டப் பட்டிருக்கிறதா என்று இழுத்துப் பார்ப்பதுபோல். ஆனால் பழக்கத்தின் பிடிப்பை உதறி ஒரு புது உலகை – அப்படி முழுவதும் புதிதில்லை – படைப்பாளி … Continue reading

நான் – நகுலன்

. நான் வழக்கம்போல் என் அறையில் நான் என்னுடன் இருந்தேன் கதவு தட்டுகிற மாதிரி கேட்டது ”யார்” என்று கேட்டேன் ”நான் தான் சுசீலா கதவைத் திற “என்றாள் எந்த சமயத்தில் எந்தக் கதவு திறக்கும் என்று யார்தான் சொல்ல முடியும்? நான்(2) நேற்றுப் பிற்பகல் 4:30சுசீலா வந்திருந்தாள் கறுப்புப் புள்ளிகள் தாங்கிய சிவப்புப் புடவை வெள்ளை ரவிக்கை அதேவிந்தைப் புன்முறுவல் உன் கண்காண வந்திருக்கிறேன் போதுமா என்று சொல்லிவிட்டுச் சென்றாள் என் கண் முன் நீல … Continue reading

தில்லைவெளி – நகுலன்

அவன் அதே தெருவில்தான் இருந்தான். அவரும். அவன் பென்ஷன் பெற்ற பிறகு தனது 60 ஆவது வயதில் தொடங்கி (இப்பொழுது அவன் 68 ஆவது வயதிலும்) தான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு ட்யூட்டோரியல் காலேஜில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். 9 .30  ல் இருந்து 12 .30  வரை வேலை. பிறகு காலம் அவன் கையில். அது ஒரு சௌகரியமான ஏற்பாடாகவே அவனுக்குத் தோன்றியது. நடுவில் செல்லப்பா எழுதிய “வெள்ளை” என்ற கதை அவனுக்கு அடிக்கடி … Continue reading

நகுலனின் பத்துக் கவிதைகள் – எஸ்.ரா

நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழியும் அகப்பார்வையும் தனித்த கவியுலகமும் கொண்டவர்கள். மூவரது கவிதைகளிலும் அடிநாதமாக தமிழின் கவித்துவமரபும் சங்க இலக்கியம் துவங்கி சமகால உலக இலக்கியம் வரை வாசித்த நுட்பமும் ஒடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த மூவருக்கும் பொது ஒற்றுமைகள் கிடையாது. தன்னளவில் இவர்கள் தனித்துவமான ஆளுமைகள். இவர்களின் பாதிப்பு இளம்கவிஞர்களிடம் கண்கூடாக காண முடிகிறது. மூவருடன் பழகி … Continue reading

>நன்மையும் சாசுவதம் – ஷங்கர்ராமசுப்ரமணியன்

> நன்மையும் சாசுவதம்: ஆனால் தீமையும் சாசுவதம் ஷங்கர்ராமசுப்ரமணியன்   நகுலன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் நான் செய்ய முயற்சித்தது நகுலன் தொடர்பாக பெருகிய நினைவை நிறுத்த முயற்சித்ததுதான். என்னில் பெருகும் நினைவுகளுக்கு நகுலனின் மூலமாகவே நான் இடையீடு செய்யின் அது ஒரு நிமித்தம் மாத்திரம். மதம், நியதிகள், சம்பிரதாயம், பழக்கம், நிறுவனங்கள், அறிவு ஆகியவை கருத்துருவம் செய்த மனிதனின் ஏற்கனவேயான மரணத்தை விபரீத அழகுள்ள படிமங்களால் உரக்க அறிவித்தவர் அவர். தன் இருப்பையே யோகத்தின் … Continue reading

>கண்ணன்-நகுலன்

> அந்தத் தெருவின் முனையில் அந்தப் பால்கிடங்கு இருந்தது. அவன் வீட்டின் எதிரிலும் ஒரு பால் கிடங்கு. அங்கிருந்துதான் அவனுக்கு ஒரு வேலைக்காரி பால் வாங்கி வருவாள். என்றாவது ஒரு நாள் அந்தப் பால் கிடங்கில் பால் விபியோகிப்பவரிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லைறைக் கேட்டால் முகத்தில் அடித்த மாதிரி ‘இல்லை’ என்பான். அது தன் வேலையில்லை என்ற கௌரவத்தில் அவன் முகத்திலேயே ஒரு சிடுமூஞ்சித்தனம். பிறகு அவரிடம் அவன் தவறியிம் சில்லறை கேட்டதில்லை. பாங்குக்குச் … Continue reading

>நகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்-சாரு நிவேதிதா

> நகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல் (கோட்ட விளையில் நடந்த `வானவில் இலக்கிய வட்டம்’ கருத்தரங்கில் மார்ச் 28 , 1999 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை) மேலோட்டமான பார்வையில் நகுலனின் கதைகள் மிகவும் எளிமையாகவும், சுய சரிதச் சம்பவங்களாகவும், சுலபத்தில் `இலீடேட்’ செய்யக் கூடியனவாகவும் தோற்றம் தந்தாலும் அது ஒரு மாயத் தோற்றம் தான். இந்த எளிமைக்குப் பின்னால் மனித வாதை குறித்த பெரும் துக்கம் `ஹம்பி’ இடிபாடுகளாய் விரிந்து கிடக்கிறது. மனிதத் தனிமை … Continue reading

>நகுலன் : நினைவின் குற்றவாளி – ஷங்கர்ராமசுப்ரமணியன்

> தமிழ் நாவல் கதைப் பரப்பானது, கட்டுறுதிமிக்க புறநிலை யதார்த்தத்தால் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, பகுத்தறிவின் தீவிர விழிப்பால் கட்டப்பட்டது. லோகாதாயம், மதம் மற்றும் அரசு போன்ற அமைப்புகள் காலம்தோறும் மனிதனை வடிவமைக்கவும்,கட்டுப்படுத்தவும், வரையறை செய்யவும் முயன்றுகொண்டே இருக்கின்றன. ஆனால்,இவ்வமைப்புகள் தங்கள் நோக்கத்திற்கேற்ப வரையும் மனிதச்சித்திரம் மட்டுமல்ல அவன். தமிழ் நாவல் பரப்பில் பெரும்பாலும் மனிதர்கள் பேசப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட வரையறையின் மீறாத நிலைமைகளில்தான். ஸ்தூலமான நிகழ்வுகள்,வெளிப்பாடுகள், முடிவுகளைக் கொண்டு ஒரு தன்னிலையை, அதன் செயலை வரையறுக்கும் பழக்கத்தை பொதுப்புத்தி … Continue reading

”அங்கீகாரமா? அப்படீன்னா, என்ன?” – நகுலன்

  திருவனந்தபுரத்தில் ரோட்டோரத்தில் இருக்கும் புதர் ஒன்றில் இறங்கிப் போனால் பி.கே.துரைசாமியார் வீடு. அந்த பகுதி மக்களுக்கு டி.கே.துரைசாமி, ஆங்கிலப் பேராசிரியர். தமிழ்  மக்களுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த நகுலன் – எழுத்தாளர். நனவோடை உத்தியில் நாவல்கள், சிறுகதை, கவிதை என்று படைப்புலகில் வரிந்து கட்டி வாழ்ந்தவர். 80 வயதில் கோணங்கி கொடுத்த ”பாழி” நாவலை படித்துக் கொண்டிருக்கும் நகுலன், அம்பலம்இணைய இதழுக்காக அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து…… திருவனந்தபுரத்தில் எவ்வளவு காலமாக வசித்து வருகிறீர்கள்? என்னோட சிறு வயதில் … Continue reading