>நாகராஜனின் உலகம் – சுந்தர ராமசாமி

> நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை . புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்! அவர் மீது இந்த உலகம் காட்டிய அக்கறை ஒருபுறமிருக்கட்டும். தன்னுடைய அனுபவ உலகத்தின்பால் நாகராஜனுக்கு ஏற்பட்ட தீவிர அக்கறையின் … Continue reading

>பச்சைக்குதிரை – ஜி. நாகராஜன்

> ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது. ‘பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட!’ ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது. ‘எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும்? அன்னைக்கு  மாணிக்கம் வாத்தியார்கூட, ‘டே தடியா! அய்யாகிட்டச் சொல்லி, ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு’ என்கலே! இந்த மாணிக்கம் வாத்தியான்! அவன் ஒரு மண்டைக் கனம், மாணிக்கம், கீணிக்கம், சாணிக்கம், பூணிக்கம்…’ மாணிக்கம் வாத்தியார் … Continue reading

>ஜி. நாகராஜன் – கடைசி தினம்!-சி.மோகன்

> * ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் வணக்கம். என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது. எஸ் சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் … Continue reading

>ஓடிய கால்கள் – ஜி. நாகராஜன்

> அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு விறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக் கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்ப முயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின ‘அப்பா!’ என்று சொல்லி வலியைத் தணித்துக் கொள்வதுபோல. உடல் சிறிது நேரம் … Continue reading

>நாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்

> ஜி. நாகராஜன் நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி.. கோவிலில் நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் பார்த்துக் கொண்டிருந்த சிலையின் முகத்தில் அம்மாவின் களை தட்டிற்று. முகம் அவனைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தது; கண்களில் துளிர்த்த நீரைப் பார்த்தால் அழுவது போலவும் இருந்தது. சிலையின் மார்பிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வழிந்து தரையில் பொத்தென்று விழுந்தது. ஆனால் மறுகணம் அதே ஒலி ஒரு ‘கேப்’ துப்பாக்கிபோல் அவன் காதுகளில் … Continue reading

>அதுவுமொரு பசிதான் ! – அ.ராமசாமி

> அ.ராமசாமி   ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் உயர்நிலையான உளவியல் கூறுகிறது. காமம் என்னும் அப்பெருநெருப்பு பற்றிக் கொள்ளும் நேரம், இடம், எதிர்கொள்ள வேண்டிய பின் விளைவுகள் பற்றியெல்லாம் எல்லா … Continue reading

>பொய் சிரிப்பு-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் -கதாவிலாசம் ஜி.நாகராஜன் நேற்று பிற்பகலில் ஓர் இளம்பெண் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்து பார்த்தபோது, அவளுக்கு இருபது வயது இருக்கும். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஒரு ஐஸ்கிரீமை விற்பதற்காக கூல்பாக்ஸ் நிறைய கொண்டு வந்திருந்தாள். வெயிலில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கக்கூடும். அவளால் கோவையாகப் பேசக்கூட முடியவில்லை. நா வறட்சியுடன், கலைந்த தனது தலையைச் சரிசெய்தபடி, பழக்கப்படுத்தப்பட்ட கிளி பேசுவதுபோல விவரங்களை கடகடவென ஒப்பித்தாள். நான் சிரித்துக்கொண்டே,‘தண்ணீர் குடிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். … Continue reading

>துக்க விசாரணை-ஜி. நாகராஜன்

> ஜி. நாகராஜன்  -சதங்கை, மே 1973 துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலத்தானே ரோகிணியும். அவளுக்கு மட்டும் துக்க விசாரணை என்ற சம்பிரதாயம் வேண்டாமா ? நான் கடற்கரைக் கட்டில் ஒன்றில் உட்கார்ந்திருந்தேன். கடலின் இரைச்சல் காதுகளுக்கு இதமாக இருந்தது. அந்த இரைச்சலில் எத்தனையோ சுகதுக்கங்களை மறந்துவிடுகிறோம். கடலின் கண்ணுக்கடங்காத பரப்பு வேறு! அந்தப் பரப்பில்தான் … Continue reading

>நிமிஷக்கதைகள்-ஜி. நாகராஜன்

> ஜி. நாகராஜன் 1 ‘குத்தத்தை ஒத்துக்கிறயா ? ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார். ‘ஆமாங்க ‘ என்றான் கைதி. ‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ‘ என்றார் மாஜிஸ்ட்ரேட். ‘அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ‘ என்றான் கைதி. … Continue reading

>பொன் மொழிகள்-ஜி. நாகராஜன்

> -ஜி. நாகராஜன். -ஞானரதம், மே 1972 சில எழுத்தாளர்கள் தங்கள் ‘பொன்மொழிகளை ‘ தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் ‘பொன் மொழிகளே ‘ இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில ‘பொன் மொழிகளை ‘ உதிர்க்கிறேன். 1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள். 2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும். … Continue reading