“நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்" – லா.ச.ரா- நேர்காணல்

‘லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் “நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்”   சந்திப்பு: தளவாய் சுந்தரம் படங்கள்: புதூர் சரவணன் 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிருந்த ஒரு பிற்பகலில், அம்பத்தூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் லா.ச.ராமாமிருதத்தின் இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டதும், சாலையைப் பார்த்து திறந்திருந்த அவருடைய அறைக்கு அழைத்து சென்றார். பார்ப்பதற்கு குழந்தைமைக்குத் திரும்பிவிட்ட வயதானவர்களைப் போல் இருந்தார் லா.ச.ரா. கேள்விகளுக்குப் பதில் சொல்லும் போது, ஞாபக  … Continue reading

ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு – எஸ்.ரா

ப.சிங்காரம் என்ற பெயர் புது யுகம் பிறக்கிறது இதழில் சி. மோகன் எழுதிய நாவல் பற்றிய கட்டுரையில்தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது. மோகன் தமிழின் சிறந்த நாவலாசிரியர் வரி சையில் சிங்காரத்திற்குத் தனியி டம் அளித்திருந்தார். அந்த நாட் களில் ஜானகிராமன், ஜெயகாந் தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு சிங்காரம் யார் என்ன எழுதியிருக் கிறார் என்ற குழப்பம் உண்டா னது. எனது சேமிப்பிலிருந்த சிறு பத்திரிகைகளைப் புரட்டிப்புரட் டிப் … Continue reading

புற்றிலுரையும் பாம்புகள் –ராஜேந்திர சோழன்

தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக்  கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த வனமயிலு எதிர்வீட்டில் குடியிருக்கும் வாலிபனைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டாள்.  “கண்ணைப் பாரேன் நல்லா… கோழி முட்டையாட்டம் வச்ச கண்ணு வாங்காம பாக்கறத. இவனெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்கமாட்டானா… எம்மா நேரமா பாத்துக்னுகிறான்யா இதே மாதிரி…” பக்கத்தில் சற்று தள்ளி தொட்டியில் கைவிட்டுக் கலக்கியபடி மாட்டைப் பிடித்துத் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த கந்தசாமி அவன் பாட்டுக்குப் பேசாமல் இருந்தான். … Continue reading

நகுலனின் பத்துக் கவிதைகள் – எஸ்.ரா

நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழியும் அகப்பார்வையும் தனித்த கவியுலகமும் கொண்டவர்கள். மூவரது கவிதைகளிலும் அடிநாதமாக தமிழின் கவித்துவமரபும் சங்க இலக்கியம் துவங்கி சமகால உலக இலக்கியம் வரை வாசித்த நுட்பமும் ஒடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த மூவருக்கும் பொது ஒற்றுமைகள் கிடையாது. தன்னளவில் இவர்கள் தனித்துவமான ஆளுமைகள். இவர்களின் பாதிப்பு இளம்கவிஞர்களிடம் கண்கூடாக காண முடிகிறது. மூவருடன் பழகி … Continue reading

பாச்சி -ஆ.மாதவன்

பாச்சி செத்துப் போனாள். வாழ்வு அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப் போவாள் என்று கனவில்கூட நினைத்ததில்லை. மனத்தால் தீண்டிக்கூடப் பார்க்காத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பாச்சி செத்துப் போனாள்! நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே! என்ன வேண்டிக் கிடக்கிறது? போச்சு, எல்லாம் போச்சு.” கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் … Continue reading

வீட்டுக்கார சொர்ணத்தாச்சி-வண்ணநிலவன்

‘என்னடா இந்தப் பொம்பளை இத்தனை கண்டிஷன் போடுதாளென்னு வருத்தப் படாதீய.. எதையுமே கறாராப் பேசிக்கறது ஒங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. . என்ன சொல்லுதீய.. ? ‘ ‘சரிதான் சொல்லுங்க… ‘ ‘பம்பு அடிக்கும் போது மெதுவா அடிக்கணும். தக்கு புக்குன்னு அடிக்கக் கூடாது. பம்புக்கு வாஸர் போடணும்னா வாடகைக்குக் குடியிருக்கவுஹ தான் துட்டுப் போட்டு வாஸர் வாங்கிப் போடணும்.. என்ன சொல்லுதீய ? ‘ ‘சரி சொல்லுங்க.. ‘ ராத்திரி ஒன்பது மணிக்குள்ளே யாரா இருந்தாலும் … Continue reading

இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன்

‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.  ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாக, தாள் தொடு தடக்கையொடு ராஜா போல்தான் இருக்கும்.  ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல் கருமருதுப் … Continue reading

அவஸ்தைகள்-இந்திரா பார்த்தசாரதி

சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்திருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர ‘ஸினிஸிஸ’த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப்   புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள். அவர் அணிந்திருந்த உடையும், அவருடைய தோற்றமும் அவரை ஹிந்தி மாநிலத்தவர் என்று அறிவித்தது. தும்மைப் பூ போல் பளீரென்ற வேட்டி, குர்த்தா. அவர் … Continue reading

>சிலிர்ப்பு – தி. ஜானகிராமன்

> திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு … Continue reading

>பொருள்வயின் பிரிவு –விக்ரமாதித்யன் நம்பி

> பொருள்வயின் பிரிவு அன்றைக்கு அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை. நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது சாரல் மழைபெய்து சுகமான குளிர் வியாபித்திருந்தது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன் அரவம் கேட்டு விழித்த சின்னவன் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள் இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள் வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தாள் தாய்போல முதல் பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம் பிழைப்புக்காக பிரிந்து வந்துகொண்டிருந்தேன் மனசு கிடந்து அடித்துக்கொள்ள. **** கூண்டுப் புலிகள் நன்றாகவே … Continue reading