வயது – அம்பை

அம்பை இருட்ட ஆரம்பித்து விட்டது. பர்மிங்கம் சப்தங்கள் மங்க ஆரம்பித்து விட்டன. அந்த மாலைப்பொழுது கனத்துக் கிடந்தது. அதன் பளுவைத் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. பர்மிங்கமின் குளிரில் அவளும், அவளைத் தன்னுடன் சில நாட்கள் தங்க அழைத்திருந்த லாஜ்வந்தியும் சுடச்சுடப் பேசியிருந்தனர் காலையில். விவாதத்தின் முடிவில், ”தீவாவளிக்கு விளக்கு ஏற்றியும், கோலம் போட்டும் இந்தியக் கலாச்சாரத்தை இங்குள்ள இந்தியர்களுக்கு நினைவுப்படுத்த நீ நினைக்கிறாய். ஆனால் இந்த கிரியைகள் தான் கலாச்சாரமா என்று கேள்விகள் கேட்டுத் தாண்டி … Continue reading

விலாங்கு – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் கள்ளிவெட்டிப் போட்டு ஒரு மணி நேரமாவது இருக்கும். துண்டு துண்டாக, இரண்டங்குல கனத்தில் திருகுக் கள்ளிகள் குட்டையாகத் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மிதந்தன. சில துண்டுகள் வெட்டுப்பட்ட வெள்ளை சோற்றுப் பாகத்தைக் காட்டிக் கொண்டு, சில ஜோடி ஜோடியான முள்முனை வரிசைகளை மாட்டுக் கொம்புகள் போல் நீட்டிக் கொண்டு கால்மாடு தலைமாடாக வசமில்லாமல் கிடந்து உறங்கும் பிள்ளைகள் போல் குட்டைத் தண்ணீர் முழுக்க மிதந்தன. நல்ல நடுமத்தியானம். புன்னை மரக்கிளை களின் ஊடாக நங்கூரம் … Continue reading

தலித் இலக்கியம் பற்றி… – சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி தலித் இலக்கியம் பற்றி எனக்குத் தெளிவில்லை. தமிழில் மாதிரி படைப்புகள் – முக்கியமாக ஒரு நாவல் – தென்படவில்லை.படைப்பு மொழி சார்ந்து நிற்கிறது; மொழி தாண்டிப் பேசுகிறது. ஆக, தலித் இலக்கியம் பற்றி அனுபவம் பெற, உணர்வுகள் பெற எனக்கு வாய்ப்பு அதிகம் இல்லை. ஆங்கிலம் வழி சிறிய அளவில் தலித் ஆக்கங்கள் என்று கருதப்படுபவை படிக்கக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் தார்மீகக் கோபம் வலுவாகவும் கதை வலு பலவீனமாகவும் இருந்தன. படைப்பு பட்டென்று பல … Continue reading

தெரியாமலே – கந்தர்வன்

கந்தர்வன் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த அன்று திருதிருவென்று சுற்றுமுற்றும் கவனித்ததில் பலதும் கண்ணில் பட்டன. அதில் முக்கியமானது எல்லோரும் சில குறிப்பிட்ட நேரங்களில் தேநீர் அருந்தப் போய் வந்தார்கள் என்பது. அடுத்த சில தினங்களில் அவர்கள் யாரும் தனியாய்ப் போகவில்லையென்றும் குழுக்களாய்ப் போய் வருவதையும் பார்த்தேன். என் பக்கத்து சீட் சாமிநாதன் இடம்பெற்ற குழுதான் இந்தக் குழுக்களிலேயே பெரியது என்று அவனோடு சிநேகமாகி அந்தக் குழுவோடு கேன்டானில் நின்றபோது தெரிந்தது. தேநீர் அருந்தியதும் குழுக்கள் உடன் … Continue reading

கலையின் பிறப்பு – க. நா. சு.

க. நா. சு. கவிதை எனக்கும் கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்; இவற்றில் எத்தனை எட்டுக்கள் கவிதையால் சாத்தியமாயின என்று யார் தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின் எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது? மொழியின் மழலை அழகுதான். ஆனால் அது போதவே போதாது. போதுமானால் கவிதையைத் தவிர வேறு இலக்கியம் தோன்றியிராதே. போதாது என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக இத்தனை இலக்கியத் துறைகள் தோன்றின – நாடகமும் நாவலும் நீள் கதையும் கட்டுரையும் இல்லாவிட்டால் தோன்றியிராது; ஆனால் … Continue reading

>ஆனந்த விகடனில் “அழியாச் சுடர்கள்”

>   படம் உதவி : தமிழ் மகன் S.Senthilathiban

>அக்ரகாரத்தில் பூனை – திலீப் குமார்

> திலீப் குமார் ”இந்த கிழட்டுமுண்டைக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறது. இதோடு இது ஏழாவது தடவை!” பப்லிப் பாட்டி அசூயையுடன், தாழ்ந்த குரலில் குஜராத்தியில் கறுவினாள். சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த மதூரி பாய் பார்த்ததும் புரிந்துகொண்டாள். “குடித்துவிட்டுப் போய்விட்டதா, மறுபடியும்!” “பீடை, ஒரு நிமிஷம் இந்த வீட்டில் இப்படி அப்படி நகர முடிகிறதா”… என்ற பப்லிப் பாட்டி சட்டென்று, “அது சரி மகாராணி, திறந்த வீட்டில் பூனை நுழைந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்துகொண்டிருந்தீர்களோ!” … Continue reading

>முதல் பிடில் – ந.பிச்சமூர்த்தி

> ந.பிச்சமூர்த்தி      நடு நிசி, ஒரு சின்னக்குரல் – குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் – சமாதானம் சொல்லுவது போல, சின்னக் குரல் பழுத்து வேதனை அடைந்தது. எதிர் குரல் ஏங்கிக் கனிந்து ஓலமாயிற்று. தெருவாசிகளின் தூக்கம் கலைந்தது. ஒவ்வொருவராக எழுந்து மாடியிலிருந்து இருளில் கூர்ந்து பார்த்தனர். முதலில் ஒருவர் கண்ணிலும் ஒன்றும் படவில்லை. அதனால் திகிலை விளைவிக்கும் அந்த ஓலம் மட்டும் நிதானமாய் போகப் போக உயர்ந்து கொண்டு போயிற்று. … Continue reading

>கவிதை – புதுமைப்பித்தன்

> புதுமைப்பித்தன் கவிதை, கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது. ‘பேனா எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா ? குரங்குகளா ஒன்றை மேஜை மேல் வைக்க விடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது ? இருந்தாலும், இந்தக் குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டை கிராமபோனை வைத்துக்கொண்டு காதைத் துளைத்துக் கொள்ளலாம் ‘. குழந்தைகளால் என்ன பிரயோஜனம் … Continue reading

>சுந்தர ராமசாமி – நேர்காணல்

>    நீங்கள் எழுத்தாளனாய் வாழ்வைத் தொடங்கி, இத்தனை காலம் எழுத்து வாழ்வில் பயணம் செய்து நிறைய அனுபவங்களைப் பெற்ற பின்பும் இன்று உங்கள் எழுத்து வாழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்? நான் எழுதத் தொடங்கிய பின் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. கனவுபோல் நழுவி விட்டிருக்கிறது காலம். எப்போதும் என் எழுத்து வாழ்க்கை சீராகவோ ஒழுங்காகவோ இருந்தது என்று சொல்ல முடியாது. நிறைய மேடு பள்ளங்கள். தத்தளிப்புகள். அவதூறுகளை மௌனத்தைக் கடைப்பிடித்து எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவமானம். இவையெல்லாம் … Continue reading