உத்தியோக ரேகை – சார்வாகன்

செங்கல்பட்டுத் தொழுநோய் மருத்துவமனையில் ஸர்ஜனாக இருக்கும் சார்வாகனின் இயற்பெயர் ஹரி. ஸ்ரீனிவாசன். பிறந்தது வேலூரில்(7-9-1929). இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலேயே வெளிவந்திருப்பினும் பரவலான வாசகர் கவனமும் பாராட்டும் பெற்றவை- சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட “அறுசுவை” என்ற குறுநாவல் தொகுப்பிலும்,திருவனந்தபுரம் நகுலன் தொகுத்த “குருக்ஷேத்திரம்” நூலிலும் இவருடைய படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.’கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது.இவருடைய சிறுகதை சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.   … Continue reading

>கனவுக்கதை – சார்வாகன்

> நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குப் போனபோது அங்கே வாங்குவோர் கூட்டமே இல்லை. நடேசன் கடையில் அது ஒரு சௌகரியம். அங்கே எப்பவும் கூட்டம் தெரியாது. கறுப்பு பச்சை சிவப்புப் பெப்பர்மிட்டுகள், ரப்பர் பந்துகள், விலை சரசமான பேனாக்கள், வர்ண வர்ண இங்கி புட்டியுடன், (புட்டியில்லாமல் அளந்து) சோப்பு, சீப்பு (நேஷனல் ஸ்டோரில் கண்ணாடி கிடையாது), க்ஷவரத்துக்கு முன்னும் பின்னும் முகத்தை அழகு பண்ணிக்கொள்ள, நரை மயிரைக் கறுப்பாக்க, ஒத்தை ஜோடி மூக்கை நந்நாலு என்று விதம்விதமாகக் கோடு … Continue reading

>எதுக்குச் சொல்றேன்னா…-சார்வாகன்

> அவன் பேசிக்கொண்டே போனான்: ” என்ன செய்கிறது சொல்லுங்கள். நாம் என்ன, கேட்டுக்கொண்டா பிறந்தோம். இல்லை, நம்முடைய அப்பா அம்மாவை நாமே தேடிக்கொண்டோமோ. யாரோ ரெண்டு பேர் என்னமாவோ முடிச்சுப் போட்டுக்கொண்டாங்க, நாம வந்து விழுந்தோம். பாலும் சக்கரையும் கலந்து வெக்கறப்போ ஈ வந்து விழுந்த மாதிரி. இது பொருத்தமில்லையோ? அப்போ சிரங்கிலே புழுவந்து தோணின மாதிரின்னு வெச்சுக்குங்களேன். எதுக்குச் சொல்றேன்னா , நாம வந்ததுக்கு நாம பொறுப்பாளியில்லே. ஆனாலும் வந்துட்டோம். வந்த பிறகு போகிறதுக்குள்ளே … Continue reading