நான் – மகாகவி பாரதியார்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், வாரியினுள் உயிரெலாம் நான், கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உரவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில்நகர் கோபுரம் யாவுமே நான், இன்னிசை மாதரிசையுளேன் நான், இன்பத்திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான், … Continue reading

மனிதனும் பறவையும்-ராஜமார்த்தாண்டன்

மனிதனும் பறவையும் சாலையோரம் கிடக்கிறது அந்தக் காக்கை அனாதைப் பிணமாக. சற்று முன்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் அதன் மரணம். விபத்தா? எதிரிகளின் தாக்குதலா? இயற்கை மரணமா? எதுவென்று தெரியவில்லை. மரக்கிளைகளில் மதில்சுவர்களில் கரைந்திரங்கல் தெரிவித்து கலைந்து போயிற்று உறவுக்கூட்டம் அனாதையாகக் கிடக்கிறது அது. சற்று முன்னதாக ஏதேனும் வீட்டு வாசலில் அல்லது கொல்லை மரக்கிளையில் உறவின் வருகையறிவித்து அதற்கான உணவை யாசித்திருக்கலாம். செத்துக்கிடந்த எலியை இனத்துடன் சேர்ந்து கொத்திக் குதறியிருக்கலாம். மைனாக் குருவியை விரட்டிச் சென்றிருக்கலாம். கருங்குருவியால் … Continue reading

காலவழுவமைதி-ஞானக்கூத்தன்

காலவழுவமைதி “தலைவரார்களேங்… தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம். தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த் தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம் கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம் காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்” ‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’ “வளமான தாமிழர்கள் வாட லாமா? கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா? தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக் கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய் நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர் தலைவரார்களேங் பொதுமாக்களேங் நானின்னும் யிருகூட்டம் … Continue reading

ஒரு புளியமரம்-ஆத்மாநாம்

ஒரு புளியமரம் ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு நினைவிருக்கிறதா அன்றொரு நாள் நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய் அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே உன் முகத்தில் உடலில் எங்கும் வா எப்படியும் என் மடிக்கு. -o00o- அந்தப் புளியமரத்தை நேற்றிலிருந்து அந்தப் புளியமரத்தை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் முதலில் புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள் சிறிய சிறிய … Continue reading

கனவு-அன்று-கனவு -அபி

கனவு-அன்று-கனவு எல்லாம் முடிந்துவிட்டது எனக் கடைசியாக வெளியேறிய போது கவனித்தான் பின்புலமற்ற தூய நிலவிரிவு ஒன்று அவனுக்காகக் காத்திருப்பதை கனவுபோன்று இருந்தாலும் கனவு அன்று அது ஒளியிலிருந்து இருளை நோக்கிப் பாதிவழி வந்திருந்தது அந்த இடம் கிழக்கும் மேற்கும் ஒன்றாகவே இருந்தன தூரமும் கூடத் தணிந்தே தெரிந்தது தெரிந்ததில் எப்போதாவது ஒரு மனிதமுகம் தெரிந்து மறைந்தது ஒரு பறவையும் கூடத் தொலைவிலிருந்து தொலைவுக்குப் பறந்துகொண்டிருந்தது சஞ்சரிக்கலாம் மறந்து மறந்து மறந்து மடிவுற்றிருக்கலாம் அதில் நடக்க நடக்க நடையற்றிருக்கலாம் … Continue reading

கானம் – ரவிசுப்ரமணியன்

மழை வாசம் ததும்ப விட்டு பெய்யுது மழை முள்ளில் சிக்கிய வண்ணத்துப்பூச்சி மழை நீர் சொட்ட சடசடத்து உதிர்க்கிறது ஞாபக வர்ணங்களை உடம்புலுக்கி நீர் உதறும் காகங்கள் மழைக்கு ஒதுங்கிய வெள்ளாடுகள் விலுக்கென பறக்கும் வவ்வால் அதே குளிர் அதே காற்று நீதான் இல்லை ஏதேதோ நேசிக்கக் கற்றுத்தந்த நேசிகையே இதோ வானத்தைப் பிரிந்த மழை வந்து சொல்லுது ஆறுதல் சொப் சொப்பென டப்டப்பென உனக்குமிந்த மழை அங்கேதும் சொல்லுதா இந்நேரம்**மார்ச் 1995ல் வெளிவந்த காத்திருப்பு கவிதை … Continue reading

சென்று தேய்ந்து இறுதல்-விக்ரமாதித்யன் நம்பி

சென்று தேய்ந்து இறுதல் இது என்ன இது என்னது இது குகை மனிதனொப்ப வேட்டையாடித் திரிவது ஆதிவாசிக்கும் நமக்கும் என்ன பெரிய வித்யாசம் இரை தேடித் தின்பது தூங்குவது   புணர்வது கேளிக்கையும் கொண்டாட்டமுமாய் காலம்கழிப்பது பின்னே சலித்துக்கொள்வது எவ்வளவு இனிய உலகம் இது கவிதை சங்கீதம் நாட்டியம் பாட்டு பறவைகள் வானம் காற்று மழை தொன்மக்கதைகள் சிறப்பைச் சிந்திக்கொண்டிருக்கும் பெண்கள் எதிலும் முழுசாய் லயிக்க முடியாமல் எப்பொழுதும் இரைதேடிக் கொண்டும் இருப்பு பற்றி யோசித்தபடியும் என்ன இது … Continue reading

குழந்தையின் கடல்-ராஜா சந்திரசேகர்

குழந்தையின் கடல் நள்ளிரவில் எழுந்து கடல் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்த குழந்தையை சமாதானப்படுத்தி நாளை போகலாம் எனச் சொல்லி தூங்க வைக்க பெரும்பாடாயிற்று பின் விடியும் வரை அலைகள் எழுப்பி தூங்க விடாமல் செய்தது குழந்தையின் கடல் பெயர் வைக்கும் சிறுமி நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைக்கும் சிறுமி நாய்க்குட்டிகளிடம் கேட்கிறாள் தனக்கு பெயர் வைக்கச் சொல்லி பார்க்கும் பொம்மை தன் குழந்தைக்கு பொம்மை வாங்க முடியாது எனத் தெரிந்து பேரம் பேசி வெளியேறப் பார்க்கிறார் … Continue reading

உ யி ல் -க. நா. சு. கவிதைகள்

  க.நா.சு.100 உ யி ல் என் உயிலை எழுதி வைக்க வேண்டிய நாள் வந்து விட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும் உயில் எழுத வேண்டும் – அது புருஷ லக்ஷணம். என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல் காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா சாலைகளுக்குத் தந்து விடுகிறேன் – அதைவிடச் சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான் உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும் எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து விடுகிறேன். நான் … Continue reading

பூனைக்குட்டிகள்-கா.நா.சுப்ரமணியம்

க.நா.சு.100 பூனைக்குட்டிகள் மேஜை மேல் படுத்துறங்கும் கருப்புக் குட்டி என்னைப் பேனா எடுக்க விடாமல் தடுக்கிறது  நாற்காலியில் படுத்துறங்கும் கபில நிறக்குட்டி என்னை உட்கார அனுமதிக்க மறுக்கிறது அடுப்பிலே பூனைக்குட்டி உறங்குகிறது சமையல் இன்று நேரமாகும் என்கிறாள் என் மனைவி   கஞ்சிஞ்ஜங்கா எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது டார்ஜிலிங்கில் இந்த இடத்தில் நின்று கஞ்சிஞ்ஜிங்கா மலை மேலே பனி மூடியிருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பார்க்கிறேன், வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை, என் கண் … Continue reading