ந.முத்துசாமி உடல் மொழியின் நாடகம் – எஸ்.ராமகிருஷ்ணன்

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது சாமுவேல் பெக்கட்டின் வெயிட்டிங் பார் கோதோ வாசித்தேன். அதுவரை நவீன நாடகம் என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த நாடகம் வாசிப்பதற்கு மிகுந்த ஆர்வமுடையதாக இருந்தது. அதை எப்படி மேடையேற்றியிருப்பார்கள் என்பதைப் பற்றி எனது பேராசிரியர்களில் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் லண்டனில் நடந்த நாடகவிழா ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கோதோ நாடகத்தின் வீடியோவைக் காண்பதற்குத் தந்தார். நான் வாசித்த பிரதிக்கும் நிகழ்த்தபட்ட நாடகத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருந்தது. நிகழ்த்தப்படும் வெளி … Continue reading

பிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு – எஸ்.ரா

அலைந்து திரிந்த நாட்களில் எழுத்தாளர்களை வைத்தே சென்னை நகரின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்திருந்தேன். உதாரணத்திற்கு அசோகமித்திரன் என்பது தி.நகர். திருவல்லிக்கேணி என்பது ஸ்ரீரங்கம்கண்ணன், ராஜமார்த்தாண்டன், மயிலாப்பூர் என்பது சி.மோகன், திலீப்குமார், லஸ்கார்னர் என்றால் நாகார்ஜுனன், லாசரா என்பது அம்பத்தூர், நங்கநல்லூர் என்பது வண்ணநிலவன், மற்றும் மா. அரங்கநாதன், மந்தைவெளி என்றால் சுகுமாரன், சாருநிவேதிதா, நந்தனம் என்றால் சா.கந்தசாமி, டிராட்ஸ்கி மருது, கே.கே.நகர் என்றால் வெளி ரங்கராஜன், ஆழ்வார்பேட்டை என்றால் கணையாழி அலுவலகம் மற்றும் இ.பா, நுங்கம்பாக்கம் பிரமீள், … Continue reading

மா.அரங்கநாதன்:முதல் அடி-எஸ்.ரா

    தமிழில் ஆழ்ந்த புலமையும் தீவிர தேடுதலும் கொண்ட மா.அரங்கநாதன், 1950-களில் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். இவரது ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூல் 1983-ல் வெளியாகி, தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை உருவாக்கியது. நாஞ்சில்நாட்டில் பிறந்த இவர், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘முன்றில்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். இவரது வீடு பேறு சிறுகதைத் தொகுப்பும் பறளியாற்று மாந்தர் நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். சிவனொளிபாதம் என்ற புனைபெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ள … Continue reading

கரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா

கடவுள் விடுகிற மூச்சைப் போல காற்று வீசும் கரிசல்வெளி வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம் கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்                                                                                                                – தேவதச்சன் கரிசல் நிலத்தைப் பற்றிய துல்லியமான சித்திரத்தை தேவதச்சனின் இந்தக் கவிதை நமக்குத் தருகிறது. முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட கிழிந்த துணியெனப் படபடத்த படியே ஆகாசத்தின் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் சூரியனும், ஆட்டுஉரல்களில்கூட நிரம்பி வழியும் வெயிலும், குடிநீருக்காக அலைந்து திரியும் பெண்களும், கசப்பேறிய வேம்பும், கானலைத் துரத்தியலையும் … Continue reading

ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு – எஸ்.ரா

ப.சிங்காரம் என்ற பெயர் புது யுகம் பிறக்கிறது இதழில் சி. மோகன் எழுதிய நாவல் பற்றிய கட்டுரையில்தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமானது. மோகன் தமிழின் சிறந்த நாவலாசிரியர் வரி சையில் சிங்காரத்திற்குத் தனியி டம் அளித்திருந்தார். அந்த நாட் களில் ஜானகிராமன், ஜெயகாந் தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு சிங்காரம் யார் என்ன எழுதியிருக் கிறார் என்ற குழப்பம் உண்டா னது. எனது சேமிப்பிலிருந்த சிறு பத்திரிகைகளைப் புரட்டிப்புரட் டிப் … Continue reading

>மெளனியுடன் கொஞ்ச தூரம் திலீப்குமார்

> திலீப்குமார் மெளனியைக் குறித்ததொரு ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன, அறிமுக நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே …. தமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ளவரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப்பற்றி நிலவி வரும் ஒரு விநோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்கமாட்டார்கள். குறிப்பாக 60களுக்குப்பின் மௌனியின் எழுத்துக்களும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக   வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதி வாய்ந்த விரிவான … Continue reading

>முழுத்தொகுப்புகள்,நாவல்கள்

> காலச்சுவடு பதிப்பகம்      அடையாளம்           கு.ப.ரா கதைகள் ,பிரமிள் கவிதைகள்      தி.ஜானகிராமன் படைப்புகள் – ஐந்திணை

>தி.ஜா : கரும்பலகை காட்சிகள் : எஸ்.ரா.

> கதாவிலாசம் : எஸ்.ராமகிருஷ்ணன்   சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தி.ஜானகிராமன் சொற்களை இசையாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921-ல் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய  வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழின் சிறந்த பத்து நாவல்களை எவர் தேர்வு செய்தாலும் இவரது ‘மோகமுள்’ளைத் தவிர்க்க முடியாது. சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம் போன்ற சிறுகதை தொகுதிகளும், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம், … Continue reading

>வண்ணதாசன்:உள்ளங்கை எழுத்து-எஸ்.ரா

> உள்ளங்கை எழுத்து கதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் ஞானி-கேணி: டிசம்பர் 12 ஞாயிறு மாலை 4 மணி. எழுத்தாளர் வண்ணதாசன் . இடம்: 39 அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர், சென்னை நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான எஸ்.கல்யாணசுந்தரம் என்ற வண்ணதாசன், ‘தீபம்’ இதழில் எழுதத் துவங்கியவர். திருநெல்வேலிக்காரர். 1962\ல் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதையுலகம் ப்ரியமும் கருணையும் நிரம்பியது. சகமனிதர்களின் மீதான அன்பும், … Continue reading

>ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா

> ‘நரையேறும் காலம்’- கதாவிலாசம்- எஸ்.ராமகிருஷ்ணன் காலை நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது வழியில் தினமும் அவர்கள் மூவரையும் பார்ப்பேன். எழுபது வயதான ஒரு பெரியவர், நாற்பது வயதான குள்ளமான மனிதர், பதினாறு வயதுப் பையன். மூவரும் ஒரே விதமான ஷ¨, வெள்ளை நிற பேன்ட், டி&ஷர்ட் அணிந்திருப்பார்கள். அவர்களில் குள்ளமானவர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வருவார். பதினாறு வயது பையன் அவர்களோடு நடப்பதை விலக்கி தனியே ஓடத் துவங்கிவிடுவான். அப்போது நடுத்தர வயதுக்காரர் சப்தமாக ‘கோவிந்த் வெயிட்’ என்று … Continue reading