நான் எழுத்தாளனான கதை-பிரமிள்

திரு.வெங்கட் சாமிநாதன் பிரமிள் எழுதி இதுவரை வெளியாகாதிருந்ததொரு கட்டுரையின் கைப்பிரதியை சொல்வனத்தில் வெளியிடுவதற்காகக் கொடுத்தார். இக்கட்டுரையில் தனக்கு இலக்கியத்தில் ரசனையும், ஆர்வமும் ஏற்பட்டதன் பின்னணியை விவரிக்கிறார் பிரமிள். அவர் எழுத்தாளரான நிகழ்வையும் குறிப்பிட்டிருக்கிறார். என் தகப்பனார், தாயார் இருவருக்குமே சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைவிட அதீதமான உணர்ச்சி இருந்திருக்கிறது. தகப்பனாரின் நேர்மை, தாயாரின் பெண்மைக்கும் கற்பனைக்கும் உரிய இயற்கையான சாகஸங்களை இது விரூபமாகத்தான் காண அவரைத் தூண்டியிருக்கிறது. இதன் விளைவாக அவர்கள் பெரும்பாலும் சண்டையிட்டே வாழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சண்டைகளின்போது … Continue reading

ஆறில் ஒரு பங்கு- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

முகவுரை ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது. இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். “நாந்ய பந்தா வர்த்ததே அயநாய” வேறு வழியில்லை. இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், … Continue reading

மகான்கள் – கோபி கிருஷ்ணன்

    நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன்     அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை,     குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம்.     மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம்     அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப்     பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற     அடிப்படையில் … Continue reading

கு. அழகிரிசாமியின் அரிய புகைப்படங்கள்

எழுத்து வேலையில் சீதாவுடன் – 19 Jan 1956 பேச்சு நவசக்தியில் பம்பாய்த் தமிழ் சங்கத்தில் – Dec 1, 1963 Sri Lanka, Hakkalai Gardens, Sep 15, 1967 நன்றி : sarangarajan alagiriswamy

கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா

தங்கள் தங்களுக்கென அவர்களாலேயே உருவாக்கப்பட்ட சட்டப் புத்தகங்களுடன் ஒவ்வொருவரும் வலம் வந்து கொண்டிருந்தார்கள். வீடு, கடை, வீதி, மலசலகூடம், குளியலறை, குசினி, வேலைத்தளம் என எல்லா இடங்களிலும் சட்டப் புத்தகங்களை இறுக்கி அணைத்தபடி இருந்தார்கள். அதில் இடப்பட்டிருந்த ஓட்டையினூடு எதிர்ப்படுவோரை நோக்கிக் கொண்டிருந்தார்கள். இயல்பாகிப் போன நடையும், அசைவுகளும் சட்டப்படி இருக்கும் போது மட்டுமே அவர்களது இதயம் சாதாரண வேகத்துடன் துடிப்பதுடன், உணவு ஜீரணிக்கும், கால்கள் நிலம்பட நடக்கும். மீறிய நடை பாவனையைக் காணும்போது தண்டனை வழங்க … Continue reading

நீர்மை – ந. முத்துசாமி

மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப் போகிறான் ஆனால், அவள் எனக்குச் சாலைக்குளத்திலிருந்துதான் அறிமுகமாயிருக்க வேண்டுமென நிச்சயமாக இருந்தாள். எல்லாவற்றிலும் ஆச்சரியம் கொள்ளும் குழந்தைக்கு குளிக்கிறவள் என்று விநோதமற்றுப் போகாமல் அவள் நடுக்குளத்தில் தனித்துத் தென்பட்டிருப்பாள். நரைத்த பனங்காயைப் போல அவள் தலைமிதந்து அலைந்து அவளென்று தெரிய  இருந்திருக்கும். அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூறுக்கு மேல். … Continue reading

நுகம் – அ. எக்பர்ட் சச்சிதானந்தம்

ரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. எதிரே கைகட்டி நின்றவர்கள் யாரென்று தெரியவில்லை இவளுக்கு. வாசலில் சிம்சன், நேசமணி, அருள் இன்னும் மூவர் நின்றிருந்தனர் பயம், பணிவுடன். “விசுவாசத்தோடு லெட்டரை கொண்டு போய் குடுய்யா. கட்டாயம் செய்வாரு.” “தயானந்தம் தட்டமாட்டாருபா சேர்மன் … Continue reading

பூமணிக்கு கீதாஞ்சலி விருது – தமிழ்மகனுக்கு கோவை இலக்கிய விருது

கீதாஞ்சலி  விருது கோவை இலக்கிய விருது பூமணி தமிழ்மகன் .பிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும்  ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு … Continue reading

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது 2012

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை , எஸ்.ராமகிருஷ்ணன் … Continue reading

‘எதற்காக எழுதுகிறேன்’ – தி.ஜானகிராமன்

சென்னையில் 08.04.1962ல், ‘எதற்காக எழுதுகிறேன்’ என்ற தலைப்பில் நடந்த எழுத்தாளர் கருத்தரங்கில் தி.ஜானகிராமன் வாசித்த கட்டுரை. – எழுத்து – மே 1962 ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகி றாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடு கிறோம். உயிரோடிருக்க, சாப்பிடுகிறோம். பலம் வேண்டிச் சாப்பிடுகிறோம். ருசியாயிருக்கிறது என்று ஜிஹ்வா சாபல்யத்தினால் சாப்பிடுகி றோம். சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது நினைத் துக்கொள்ளப் போகிறார்களே என்று சாப்பிடுகி றோம். சில பேர் சாப்பிடுவதாற்காகவே சாப் பிடுகிறார்கள். … Continue reading