>இப்படி ஒரு பயணம் சி.மணி-வெங்கட் சாமினாதன்

> இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)   – 17.4.09 சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகிய சிங்கர் தொலை பேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச் சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா – கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின் போது தானே நடக்க … Continue reading

>அறைவெளி – சி. மணி

> சி. மணி அறைவெளி தப்பிவிட்டேன் என்று விழித்தேன். சுற்றும்முற்றும் பார்த்தேன். மேலே வானம்; நான்கு பக்கமும் பூவிருள் கூரை, சுவர்கள் எதுவும் இல்லை. எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன. வெட்டவெளிதான் இது, அறை அல்ல என்று சிலகணம் துள்ளியது என்மனம். மேற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர் தெற்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர் வடக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர் கிழக்கே நடந்தேன் இடித்தது ஒருசுவர் எழும்பிக் குதித்தேன் இடித்தது கூரை.