மௌனியின் கதையுலகம் – திலீப்குமார் – பகுதி 2

மௌனியின் கதையுலகம் – பகுதி 1 படிக்க மௌனியுடன் கொஞ்ச தூரம் – நூலிலிருந்து… மௌனியின் கதையுலகம் – பகுதி 2  தத்துவத்தைப் போன்றே இலக்கியமும் சிந்தனையைச் சார்ந்த செயல்பாடு, அதன் விளைவாக சமூகப் பார்வையையும் சார்ந்து நிற்கும் ஒன்று. எல்லாக் காரியங்களுக்கும் ஒரு சமூகப்பரிமாணம் உண்டு. மற்றவற்றை விட இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் உள்ள சமூகப்பரிமாணம் அதிகமானது. மேலும் தத்துவத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள இடையுறவு பல தளங்களில் நிகழக்கூடியதுதான். எனவே மௌனியின் எழுத்துக்களில் சமூகப்பார்வை என்பதைவிட மௌனியின் … Continue reading

மௌனியின் கதையுலகம் – திலீப்குமார்

மௌனியுடன் கொஞ்ச தூரம் – நூலிலிருந்து… மௌனியின் கதையுலகம் – பகுதி 1 1936-ம் ஆண்டுவாக்கில் மணிக்கொடியில் மௌனி முதன் முதலாகச் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் கு.ப.ரா ஆகியோரும் மணிக்கொடியில் எழுதினார்கள. தமிழ்ச் சிறுகதைத் துறை முதிர்ச்சியடையத் துவங்கிய காலமும் இதுதான் எனக் கொள்ளப்படுகிறது. மணிக்கொடியில் மௌனியின் பிரவேசம் வெகுவாக ஊர்ஜிதப்படுத்தியது. மௌனி படைப்புத் துறைக்கு வந்த்து ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலரும் அறிவித்திருக்கிறார்கள். மௌனி மணிக்கொடியில் எழுதினாலும் மணிக்கொடி என்ற … Continue reading

>மெளனியுடன் கொஞ்ச தூரம் திலீப்குமார்

> திலீப்குமார் மெளனியைக் குறித்ததொரு ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன, அறிமுக நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே …. தமிழின் நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொள்ளவரும் எவரும் முதலில் மௌனியின் எழுத்துக்களையும், அதைச் சார்ந்து ‘மௌனி’ என்ற எழுத்தாளனைப்பற்றி நிலவி வரும் ஒரு விநோதமான படிமத்தையும் உணரத் தவறியிருக்கமாட்டார்கள். குறிப்பாக 60களுக்குப்பின் மௌனியின் எழுத்துக்களும் அவற்றின் சிறப்புகளும் நம்மிடையே வெகுவாக   வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மௌனியைப் பற்றி நாம் பொருட்படுத்தக்கூடிய தகுதி வாய்ந்த விரிவான … Continue reading

>முழுத்தொகுப்புகள்,நாவல்கள்

> காலச்சுவடு பதிப்பகம்      அடையாளம்           கு.ப.ரா கதைகள் ,பிரமிள் கவிதைகள்      தி.ஜானகிராமன் படைப்புகள் – ஐந்திணை

>மெளனியுடன் நேர்காணல்: கி. அ. சச்சிதானந்தம்

> தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள் அண்மையில் நிறைவெய்தினார். சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் அவரை ஒருதடவை சந்தித்தாலே போதும், அவருடைய தும்பை மலர் போல் வெண்ணிறமான, அடர்ந்து திமிறி நிற்கும் தலைமுடியும்; சிற்பியின், ஓவிய விரல்களில் தினவு எடுக்கச் செய்யும் முகபாவமும், அவரின் உரையாடலும், அவரது உயர்ந்த கலைப்படைப்பைப் போலவே பசுமையாக நினைவில் நிற்கும். மெளனி அவர்கள் கணிதத்தில் பட்டம் பெற்றவர். ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர்; … Continue reading

>மௌனியுடன் ஒரு சந்திப்பு – எம்.ஏ. நுஃமான்

> 30-12-1984 மாலை 5 மணி அளவில் மௌனியைப் பார்க்கப் போனேன். சென்னையில் க்ரியாவுக்குப் போயிருந்த போது தான் மௌனியும் சிதம்பரத்தில் இருப்பதாக அறிந்தேன். திலீப்குமார் அரைகுறையாகச் சொன்ன ஒரு விலாசத்தை இன்னும் அரைகுறையாகக் குறித்து வைத்திருந்தேன். வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் மூலையில் பிரியும் ஒரு தெரு. இலக்கம் 4. ஒரு மாடிவீடு என்ற குறிப்பு எனது டயரியில் இருந்தது. வீட்டைத் தேடிச் சென்ற போதுதான் வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்காகவே என்ற … Continue reading

>மௌனியின் உலகு-வெங்கட் சாமினாதன்

> வெங்கட் சாமினாதன் எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத இந்த எழுத்து மேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல? அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான். பின்னர் அவ்வப்போது எழுதியது நண்பர்களும் மற்ற எழுத்தாளர்களும் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான். மௌனியைத் தமிழகத்துக்குத் திரும்ப நினைவூட்டிய மறைந்தே போன அவர் இடத்தைத் திரும்ப புனர்ஜீவித்த க.நா. சுப்ரமண்யம் 1959-ல் மௌனியின் கதைகளைச் சேகரித்து அவர் … Continue reading

>மறந்து போன மௌனி-எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ், ராமகிருஷ்ணன் 2007 ஆண்டு மௌனியின் நூற்றாண்டுவிழா. ஆனால் புதுமைப்பித்தன் போல மௌனி பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. ஒரு வேளை மௌனி எந்த இலக்கியக் குழுவையும் சேராமலிருந்தது இதற்கு காரணமாக இருந்திருக்க கூடும். மௌனியின் படைப்புலகம் குறித்து சமகாலப் பார்வைகளுடன் கூடிய விமர்சனம் இன்று தேவையாக உள்ளது. ஒரு முறை ஜெயகாந்தனிடம் அவருக்குப் பிடித்தமான சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக சொன்னபோது அவர் மௌனியின் கதையைத் தேர்வு செய்ததோடு, தனக்குப் பிடித்த எழுத்தாளர் மௌனி என்று குறிப்பிட்டுள்ளார். … Continue reading

>மெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்-பாவண்ணன்

> பாவண்ணன் தற்செயல் என்கிற விஷயம் மனித வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பம் ஆகும். அதை ஒரு துாண்டுதல் என்றும் கொள்ளலாம். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் அத்தற்செயலின் விளைவாக உருவாகின்றன. திரண்டெழும் விடைகள் வழியாகப் பல துணைக்கேள்விகள் உருவாகின்றன. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கேள்வியை உருவாக்கியபடி நீள்கிறது. மனத்தில் ஒரு முழுக்கேள்விச் சங்கிலியும் அதற்கு இணையான விடைச்சங்கிலியும் பின்னிப் பிணைந்தபடி வளர்ந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு விடையும் ஒரு புதிய புரிதலைத் தருகிறது. ஒவ்வொரு … Continue reading

பிரபஞ்ச கானம்-மெளனி

மெளனி நன்றி : இச்சிறுகதை 1936ல் மணிக்கொடி இதழில் வெளியானது. கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட ‘இந்த நூற்றாண்டின் சிறுகதைகள்’ என்ற விட்டல் ராவ் தொகுத்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது.    அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து … Continue reading