தாயாரின் திருப்தி-கு.ப.ரா

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கை கூட வாயைத்திறந்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காக பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்துவந்து சோ்ந்தார்கள் புரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார். “பிராசீநவிதி“ “பவித்ரம் த்ருத்வா“ என்பவைகளையும் மந்திரத்துடன் சேர்த்து ஒரு ராகத்தில் பாடிக்கொண்டே போனார். பிராமணர்களுக்கு வஸ்திரம் கும்பம் தட்சிணை இவைகள் கொடுக்கப்பட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள். … Continue reading

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதிமணியன்.

ருசியான கறி சாப்பிட வேண்டுமென்றால் முஸ்லீம்களை சிநேகிதர்களாய் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பான் பக்தவச்சலம். அவனுக்கென்று பெயர்சொல்லக்கூடிய அளவில் ரகீம், மெகபூப் இருந்தார்கள். பக்தவச்சலம் வீட்டில் யாரும் கறி சாப்பிடுவது இல்லையென்றாலும் அவன் கிடைக்கிற பக்கம் சாப்பிடுவான், நான் கூட ரொம்ப நாளாய் பக்தவச்சலத்தை அய்யர் என்றுதான் நினைத்திருந்தேன், சிவப்பாய் நாமம் போட்ட முகத்தோடு அவனின் விதவை அம்மா வும், அவனின் அண்ணனின் பூணூல் உடம்பும், செத்துப் போய் படத்தில் இருந்த அப்பாவின் நாமம் போட்ட போட்டோவும் … Continue reading

வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி

இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும். வண்ணதாசனின் உலகம் புறப் பார்வையில் எப்போதும் நம் முன் சதா விழுந்து கொண்டிருக்கும் சாதாரண உலகம். டவுன் பஸ், டாக்சி ஸ்டாண்ட், … Continue reading

ந.முத்துசாமிக்கு பத்மஶ்ரீ விருது

    நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான ந.முத்துசாமிக்கு இந்த வருடத்தின் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகள். ந.முத்துசாமி:நரையேறும் காலம்: எஸ்.ரா இழப்பு – ந. முத்துசாமி

தில்லைவெளி – நகுலன்

அவன் அதே தெருவில்தான் இருந்தான். அவரும். அவன் பென்ஷன் பெற்ற பிறகு தனது 60 ஆவது வயதில் தொடங்கி (இப்பொழுது அவன் 68 ஆவது வயதிலும்) தான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு ட்யூட்டோரியல் காலேஜில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். 9 .30  ல் இருந்து 12 .30  வரை வேலை. பிறகு காலம் அவன் கையில். அது ஒரு சௌகரியமான ஏற்பாடாகவே அவனுக்குத் தோன்றியது. நடுவில் செல்லப்பா எழுதிய “வெள்ளை” என்ற கதை அவனுக்கு அடிக்கடி … Continue reading

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது(2011)

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக க … Continue reading

நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

அவனை அவர்கள் அழைத்தபோது மிகுந்த தயக்கத்தைக் காட்டினான். ‘நானா’ என்று வாய்க்குள்ளே மெல்ல இழுத்தான். ஆனால், அவன் நினைவுப் பாசிகள் துடைக்கப்பட்ட பளிச்சிடலின் அடியில் விருப்பமும் ஆர்வமும் புடைத்தெழும்பின. குழந்தைகள் அவனை மேலும் வற்புறுத்தலாயினர். அங்கே விருந்தாளியாக வந்திருந்தான் அவன். ஓரளவுக்கு நெருங்கிய உறவுதான். அடிக்கடி வரவில்லை என்பதே இயல்பாக இருக்க விடவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகள், எட்டிலிருந்து பன்னிரண்டு வயதிற்குள்ளான மூவர் – சிறுமி, இரண்டு சிறுவர்கள் – அவன் மடிமீது புரளவும் விளையாட்டின்   … Continue reading

தேவதச்சனுக்கு விளக்கு விருது

நவீனத் தமிழ்க் கவிதையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது. நாற்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய விருது இது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான ‘விளக்கு’ புதுமைப்பித்தன் நினைவாக வழங்கும் இந்த விருதை இதுவரை தமிழின்  முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா  ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், … Continue reading

அப்பாவைப் புனிதப்படுத்துதல்-லஷ்மி மணிவண்ணன்

    அப்பாவைப் புனிதப்படுத்துதல் அப்பாவின் நண்பர்கள் ஊடகங்களில் வருகிறார்கள் திரைப்படங்களில் நடிக்கிறார்கள் அம்மாவின் திகைப்பான கண்கள் வழியே சிறுவன் பார்க்கிறான் அப்பாவின் உறவினர்கள் பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள் பதவிகளிலிருக்கிறார்கள் நிறுவனங்கள் இயக்குகிறார்கள் சிறுமி கேள்விப்படுகிறாள் அப்பா அன்புள்ளவரா சொல்லத் தெரியாது பண்புள்ளவரா இல்லை வீதிகளில் சண்டையிட்டு வீட்டுக்கு வருபவர் வீட்டில் சண்டையிட்டு வீதிகளில் நுழைபவர் அப்பா எப்போது வீட்டுக்கு வருவார் தெரியாது எப்போது வெளியிலிருப்பார் தெரியாது கைகால் ஒடிந்தால் மருத்துவமனை கலவரமென்றால் காவல்நிலையம் மதிப்பெண் பட்டியலைச் சரிபார்க்கமாட்டார் … Continue reading

சென்னை புத்தகக் கண்காட்சி 2012

  புத்தகப்பிரியர்களுக்கான விழாக்காலம் வந்துவிட்டது. இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பதே தனியின்பம்தான். போன வருடம் வாங்கிய புத்தகங்களை வாசித்தோமோ இல்லையோ, இன்னும் புத்தகங்களை வாங்கவே மனம் துடிக்கும். வாருங்கள் நண்பர்களே மீண்டும் ஒருமுறை புத்தக கூட்டத்திற்குள் தொலைந்து போவோம். சில பரிந்துரைகள் : முழுத்தொகுப்புகள்,நாவல்கள்