ஆத்மாநாம் நேர்காணல் – பிரம்மராஜன்

ஆத்மாநாம் (18. 1. 1951 – 6. 7. 1984) ஆத்மாநாமின் இயற்பெயர் S. K. மதுசூதன். 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். சென்னையிலேயே வளர்க்கப்பட்டார். தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் ஆத்மாநாமுக்குத் தமிழில் இருந்த ஈடுபாடு அதிகம். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பை (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் … Continue reading

ஒரு புளியமரம்-ஆத்மாநாம்

ஒரு புளியமரம் ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு நினைவிருக்கிறதா அன்றொரு நாள் நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய் அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே உன் முகத்தில் உடலில் எங்கும் வா எப்படியும் என் மடிக்கு. -o00o- அந்தப் புளியமரத்தை நேற்றிலிருந்து அந்தப் புளியமரத்தை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் முதலில் புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள் சிறிய சிறிய … Continue reading

2083 ஆகஸ்ட் 11 – ஆத்மாநாம்

. ஒரு புளியமரம் ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு நினைவிருக்கிறதா அன்றொரு நாள் நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய் அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே உன் முகத்தில் உடலில் எங்கும் வா எப்படியும் என் மடிக்கு. -o00o- அந்தப் புளியமரத்தை நேற்றிலிருந்து அந்தப் புளியமரத்தை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் முதலில் புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள் சிறிய … Continue reading

உன் நினைவுகள் – ஆத்மாநாம்

காட்சி முதலில் நீதான் என்னைக் கண்டுகொண்டாய் எனக்குத் தெரியாது மனிதர்களைப் பார்த்தவண்ணம் முன்னே வந்துகொண்டிருந்தேன்  உயிருடைய ஒரு முகத்துடன் பளிச்சிட்டுத் திரும்பினாய் பின்னர் நடந்தவைக்கெல்லாம் நான் பொறுப்பல்ல எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய் அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க காட்சிகள் மாற மாற நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம். உன் நினைவுகள் எனினும் நான் உற்றுப் பார்த்தேன் கூர் வைரக் கற்கள் … Continue reading

ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர்.-சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் கவிதைகளும் நம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. இன்று அவரைப் பரிசீலனை செய்ய இந்த இடைவெளி நமக்கு உதவக்கூடும். ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் … Continue reading