சுரேஷ்குமார இந்திரஜித் – நேர்காணல்

மறைந்து திரியும் கலைஞன் சந்திப்பு: அரவிந்தன் அவரது எழுத்தைப் போலவே பேச்சும் இருக்கிறது. சுருக்கமாக, அளந்தெடுத்த வார்த்தைகள் கொண்டதாக, பதற்றம் சிறிதும் இல்லாததாக. மறைந்து திரியும் கிழவன் தொகுப்பின் மூலம் தீவிர எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் தனிக் கவனம் பெற்ற சுரேஷ்குமார இந்திரஜித்தை (53) சந்தித்துப் பேசக் கண்ணன், நெய்தல் கிருஷ்ணன் மற்றும் நான் ஆகியோர் ஆகஸ்ட் மாத நடுவில் மதுரைக்குச் சென்றோம். அப்போது மதுரையில் வசித்த கவிஞர் தேவேந்திர பூபதியும் எங்களுடன் இணைந்துகொண்டார். சுரேஷ்குமார் … Continue reading

மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்

TCX 6838 என்ற எண்ணுள்ள என் ஸ்கூட்டரில் விருமாண்டியைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன. விருமாண்டி என் நண்பன். ஓடும் ஆற்றின் கரைகளில் விருமாண்டித்தேவர் குடும்பத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புகள் இருக்கின்றன. தென்னந்தோப்புக்குள் ஓர் அழகான வீடும் அவர்களுக்கு இருந்தது. அநேகமாக விருமாண்டி மட்டுமே அங்கு இருப்பான். அவன் குடும்பத்தினர் ஊருக்குள் குடியிருந்தனர். தென்னந்தோப்பு வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கள்ளுக்கடை அங்கே அயிரை மீன் குழம்பு … Continue reading

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் -சுரேஷ்குமார இந்திரஜித்

நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதை அவர் முகம் காட்டியது. ‘நீங்கள் இந்தியாவா, ஸ்ரீலங்காவா ? ‘ என்று அவர் … Continue reading

>விரித்த கூந்தல்-சுரேஷ்குமார இந்திரஜித்

> இவ்வளவு பெண்கள் விரிந்த கூந்தலுடன் இருப்பது அவனுக்குத் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பெண்கள் விரிந்த கூந்தலுடன் உட்கார்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்தார்கள். பலர் நனைந்த ஆடைகளுடன் இருந்தார்கள். அருவி, பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருந்தது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் நீர்வீழ்ச்சியில், பாறையுடன் தேனடை போல அப்பியிருந்தனர். மிகவும் குறுகிய ஒரு நீர்வீழ்ச்சியில் (ஒரு நபர் மட்டுமே நிற்கலாம்) வரிசையாய்ப் பெண்கள் நின்று தலையையும், உடலையும் நனைத்து வெளியேறிக் கொண்டிருந்தனர். நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் தலையிலும் … Continue reading