”காஞ்சனா” தொகுப்பு பற்றி–க,நா.சு

இரண்டொரு வருஷயங்களுக்கு முன் அயல் நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.   இந்திய பாஷை இலக்கியங்களைப்பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை.    இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல் அவர், அவசரப்படாமல். நிதானமாக, நின்று, ஆர்வத்துடன், பல விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள முயன்றார்.  வசதியும், தகுதியுமுள்ளவராக இருந்தார் அவர்.   பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.   üüபொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத … Continue reading

‘இலக்கிய விசாரம்’ முன்னுரை – க.நா.சு

இலக்கிய விசாரம் என்பது சற்றுக் கனமான விஷயம்தான். அதைச் சுவைபடச் செய்ய வேண்டிய அவசியம் ஆரம்பத்தில் இன்றுள்ள நிலையில் உண்டு. கதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுதும் ஆசிரியன் வாசகனை நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். எழுதி முடித்த பிறகு வாசகன் வரலாமே தவிர, அதற்கு முன் இலக்கியாசிரியன் முன் அவன் வரக்கூடாது; வந்தால் அவன் எழுத்துத் தரம் குறைகிறது. ஆனால் இலக்கிய விசாரம் செய்யும்போது மட்டும் எந்த இலக்கியாசிரியனும் வாசகனை மனத்தில் வைத்துக் … Continue reading

க. நா. சு. வின் ஓர் உரை

க.நா.சு.100 இத்துடன் வெளியாகும் க.நா.சு.வின் உரை 16.2.1988 ஆம் நாள் ஒய்.எம்.ஸி.ஏ. கருத்தரங்கில் நிகழ்த்தப் பெற்றது. சிறுகதைபற்றிய பல விளக்கங்களையும் கொண்டிருப்பதே அவ்வுரையின் முக்கியத்துவம். இதுவரை பிரசுரமாகாதது. மா. அரங்கநாதனின் ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பு பற்றிய கருத்தரங்கத்தின் போது ஆற்றிய உரை. () () () இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புத்தக விமர்சன கூட்டங்களுக்குப் போனால் விமர்சனங்களில் ஒரு மாறுதல் இருப்பதையும் ஓரளவிற்கு புத்தகங்களைப் பற்றி பொதுவாகப் பேசுவதற்கு பலபேர் தயாராக … Continue reading

எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. – பாரதி மணி

க.நா.சு.100 ஐம்பதுகளில் நான் கல்கண்டு, கண்ணன், ஜில்ஜில், அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக் கொண்டிருந்த போது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி — ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு மாப்பிள்ளையாக — இருந்தார். ஊரே அவரை ‘மாப்பிள்ளை’யென்று தான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளை மாமா’.  மிகவும் சுவாரசியமாக, எதைப்பற்றியும் பேசத்தெரிந்தவர். அவருக்கு தேவையெல்லாம் லீவுநாட்களில் எங்களைப்போன்ற பதின்மவயது ‘ஆடியன்ஸ்’ தான். மணிக்கணக்கில் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். பலநாட்கள் … Continue reading

க.நா.சுவின் தட்டச்சுப்பொறி-ஜெயமோகன்.

க.நா.சு.100 மலையாள நாவலாசிரியர் சி.ராதாகிருஷ்ணன் இன்று வாழும் முக்கியமான படைப்பாளி. செவ்வியல் தன்மை கொண்ட பெரும்நாவல்களை உருவாக்கியவர். தன் சுயசரிதையில் அவரது முதல் நாவலான நிழல்பாடுகள் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக Patches of shade என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கான மொழியாக்கங்களுக்கு ஒரு போட்டி வைத்தபோது அன்று இளம் எழுத்தாளராக இருந்த சி.ராதாகிருஷ்ணன் தன் நாவலின் பிரதியை அனுப்பியிருந்தார். டெல்லியில் தேர்வுக்குழுவில் என்ன நடந்தது என்று … Continue reading

க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள் -ஜி. குப்புசாமி

க.நா.சு.100 க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள் உன்னதங்களைப் பரிந்துரைத்த ஒற்றைக் குரல் தன்னை வெறுக்கிற சமுதாயத்தை விட்டுக் கெட்டிக்காரத்தனமாக ஒதுங்கி நின்று உண்மை இலக்கியாசிரியன் தனது முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறான். மௌனமாக, வாசகர் கவனத்தையும் கவர விரும்பாமல் – திருட்டுத் தனமாக என்றுகூடச் சொல்லலாம் – எழுதிச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான். தனி மனிதனாக அவன் கௌரவிக்கப்படுகிறான். எழுதிவிட்டானானால் ஒரு சில வாசகர்களையேனும் எட்டுவது பெரிய விஷயமாக இல்லை. வேறு என்ன வேண்டும் ஒரு நல்ல உண்மையான இலக்கியாசிரியனுக்கு? இலக்கிய … Continue reading

க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்-சுகுமாரன்

க.நா.சு.100 ‘காலச்சுவடு ‘ பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்களின் அறிமுக அரங்கில் பங்கேற்றுப் பேசக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என் மனதில் உருவாகும் சில நினைவோட்டங்களும் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க.நா.சுப்ரமண்யத்தைச் சந்திக்க இருபத்து மூன்று வயது இளைஞரான சுந்தர ராமசாமி, அம்புஜவிலாசம் ரோட்டில் முன்னும் பின்னும் நடந்ததுபோல, நாகர்கோவில் மணிமேடைக்குச் சமீபமுள்ள ஜவுளிக்கடையை இலக்காகக்கொண்டு இருபத்தைந்து வயது இளைஞனொருவன் நடந்துபோகும் காட்சி மனதில் விரிகிறது.க.நா.சு.தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஜவுளிக்கடை ‘சாமி ‘ … Continue reading

தாம்பத்யத்தின் முழுமை : க. நா.சு-வின் மனமாற்றம்.- அ.ராமசாமி

க.நா.சு.100 கதைவெளி மனிதர்கள் புதிதாக வந்துள்ள அரசு அறிக்கையின்படி ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைகளைப் பெறுவதற்குத் தங்கள் புகைப்படங்களோடு வாரிசுகளின் புகைப்படத்தையும் அலுவலகத்தில் தர வேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தச் சுற்றறிக்கையைப் பார்த்தவுடன் அவர்கள் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தம்பதிகள். இதுவரை அவர்களின் நம்பிக்கை சார்ந்த பயணங்களுக்கும், மருத்துவம் சார்ந்த சோதனை முயற்சிகளுக்கும் எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைத்துவிடவில்லை என்றாலும் மனம் தளர்ந்து விடவில்லை. கடைசி முயற்சியாகச் செயற்கை முறையில் … Continue reading

உ யி ல் -க. நா. சு. கவிதைகள்

  க.நா.சு.100 உ யி ல் என் உயிலை எழுதி வைக்க வேண்டிய நாள் வந்து விட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும் உயில் எழுத வேண்டும் – அது புருஷ லக்ஷணம். என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல் காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா சாலைகளுக்குத் தந்து விடுகிறேன் – அதைவிடச் சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான் உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும் எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து விடுகிறேன். நான் … Continue reading

நவீன கவிதையை க.நா.சுவிலிருந்தும் தொடங்கலாம்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

க.நா.சு.100 க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன், நவீன கவிதையின் இன்றைய உருவம், எதேச்சையாக, எதிர்ப்புகளற்று, வசதிகள் கொண்ட ஒரு சூழலில் பிறந்ததாகவே எண்ணக்கூடும்.  புதுக்கவிதை தன்னை நிறுவிக் கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல.. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்தை … Continue reading