ஒரு திருணையின் கதை – மு. சுயம்புலிங்கம்

பாட்டி தன் அந்திமக் காலத்தில் இந்தத் திருணையில்தான் நாள் பூராவும் இருந்தாள். வயலில் நெல்லுக்குக் களை பறிக்கும் பொழுது தோகை அவள் கண்ணில் இடித்தது. பார்வை போய்விட்டது. கண்ணு தெரியாத பாட்டி இந்தத் திருணையைக் காத்துக் கிடந்தாள். தாத்தா ரொம்ப காலம் இந்தத் திருணையில்தான் படுத்துக் கிடந்தார். அவர் முதுகுப்புறம் சதையில் புண் வைத்தது. புண்களில் புழு நெளிந்தது. தட்டைப் பாரம் ஏற்றிய மாட்டு வண்டியைத் தாத்தா ஓட்டி வந்தார். ஒரு ஓடையில் வண்டி கவிழ்ந்தது. தாத்தாவை … Continue reading

>அழிவின் தத்துவம்-மு.சுயம்புலிங்கம்,

> அழிவின் தத்துவம். ஆட்டுக் கிடை வீட்டுக்குப்பை கொளூஞ்சி ஆவரை நாட்டு உரங்களில் வேர்விட்டு விளைந்த நெல்லுக்குருசி இருந்தது ஆரோக்கியம் இருந்தது இயந்திர உரம்ருசியைக் கெடுத்தது ஆரோக்கியத்தைக் கெடுத்தது பூமியை தன்னீரைகெடுத்தே விட்டதுரசாயணம். என்னைப் பாதித்தவர்கள் பங்களா வாசலில்தூக்கம் மெனக்கெட்டுநினைவுகள் சவைத்துக்கொண்டிருக்கும்கொர்க்காக்கள். பிதுங்கிக்கொப்பளிக்கும் ஜலதாரைக்குள்தன் தன் முழு உடம்பைத் தள்ள இரும்புபிளேட்டைத்தூக்கும் தோட்டிகள்   நாளைக்கு இந்தியா வல்லரசாகப் போகிறது எல்லா தேசத்து அதிபர்களுக்கும் சொல்லப் படுவது என்னவென்றால் எங்கள் மண்ணில் குப்பை கொட்டுவதை நிறுத்துங்கள். இந்த … Continue reading

>தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலிங்கம்

>   தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும் ஒரு அடி கொடுப்போம் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள் தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் பழைய துணிச்சந்தையில் சகாயமாகக் கிடைக்கிறது இச்சையைத் தணிக்க இரவில் எப்படியும் இருட்டு வருகிறது கால்நீட்டி தலைசாய்க்க தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது திறந்தவெளிக் காற்று யாருக்குக் கிடைக்கும் எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது எதுவும் கிடைக்காதபோது களிமண் உருண்டையை … Continue reading

>வீட்டின் சிறகுகள் -எஸ்.ராமகிருஷ்ணன்

> எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம் மு.சுயம்புலிங்கம் பூனைகளைபோல வெயில், யாருமற்ற வீடுகளில் ஏறியிறங்கி விளையாடும் கிராமங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு பயணத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுபாவத்தில், உடையில், பேச்சில் பழக்கவழக்கங்களில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக நாமே கவனமாகத் துடைத்து எறிந்துவிட்டு அடையாளமற்ற மனிதர்களாக வாழ்வதற்குப் பழகிவிட்டோம். சப்தமாகச் சிரிப்பதற்கும் வாய்விட்டு அழுவதற்கும்கூடக் கூச்சமாக இருக்கிறது. அடுத்தவர்கள் கவனிக்கிறார்களா என்று பார்த்துப் பார்த்துதான் உணவகங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது. நண்பனின் தோளில் கைபோட்டுக் கொள்வது அநாகரிகமாகிவிட்டது. மூத்திரம் பெய்வதற்குக்கூட வரிசையில் … Continue reading