மிலேச்சன்-அம்பை

எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட ‘அம்பை’யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம்புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. ‘அந்தி மாலை’  (நாவல், 1966), ‘நந்திமலைச் சாரலிலே’ (குழந்தைகள் நாவல், 1961), ‘சிறகுகள் முறியும்’ (சிறுகதைகள், 1976) – இவை நூல் வடிவில் வெளிவந்துள்ள படைப்பு கள். ‘தங்கராஜ் எங்கே?’ என்ற குழந்தைகள் திரைப் படத்துக்காக … Continue reading

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – அம்பை

ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு … Continue reading

வெளிப்பாடு – அம்பை

அந்தப் பேருந்து நிலையத்தை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதன் ஓசைகளையும், பிம்பங்களையும் மனதில் உறைந்து போக வைத்துவிட வேண்டும். பின்னால் நினைவுகூற. முக்கலும், முனகலும், பெருமூச்சுமாய் ஒரு தமிழ் சினிமாப் பாட்டு. வீடியோ கோச்சுகளின் அழைப்பை விடுக்கும் கூவல்கள். அறிவிப்புகள். பாட்டின் அதிர்வுப் பின்னணியில், மடக்கிய ரவிக்கையிலிருந்து வெளிப்பட்ட ஒரு முலை. காம்பு விறைத்து, பழுத்து. அதைச் சிறு சப்பலுடன் கவ்விய சிறு  உதடுகள். நீலமும் சிவப்புமாய், கூச அடித்த பட்டுப் புடவையின்  கழுத்துப்புற … Continue reading

ஒரு கட்டுக்கதை – அம்பை

பன்றி என்னுடன் சம்பாஷிக்க வந்தபோது மாலை ஆறரை மணி இருக்கும். ஒரு பதினைந்து இருபது குட்டிகளாவது இருக்கும் தொளதொளத்துத் தொங்கிய அதன் வயிற்றில். சாக்கடையில் புரண்டுவிட்டு வந்திருந்தது. மேல்உடம்பு கன்னங்கரேல் என்று சாக்கடைத் தண்ணீரில் பளபளத்தது. கீழே, வயிறு சதையின் நிறத்தில் கட்டிகட்டியாய்த் தொங்கியது. ”இதோ பார். எனக்குப் பேச வேண்டும்” என்றது. ”என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?” என்றேன். ”உன் புத்திசாலித்தனமான, தீட்சண்யமான கண்களைக் கண்டு உன்னைத் தேர்ந்தெடுத்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று எதிர்பார்க்காதே. பார்க்கப்போனால் அப்படி … Continue reading

>அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை

>   அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருந்தாள். புரிந்து கொள்ளும் வயதில்லை எனக்கு. நான்கு வயது. விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி சத்தம் கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன். கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே எவனோ கொத்து இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று சில மாதங்கள் மட்டுமே சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான் … Continue reading

வயது – அம்பை

அம்பை இருட்ட ஆரம்பித்து விட்டது. பர்மிங்கம் சப்தங்கள் மங்க ஆரம்பித்து விட்டன. அந்த மாலைப்பொழுது கனத்துக் கிடந்தது. அதன் பளுவைத் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. பர்மிங்கமின் குளிரில் அவளும், அவளைத் தன்னுடன் சில நாட்கள் தங்க அழைத்திருந்த லாஜ்வந்தியும் சுடச்சுடப் பேசியிருந்தனர் காலையில். விவாதத்தின் முடிவில், ”தீவாவளிக்கு விளக்கு ஏற்றியும், கோலம் போட்டும் இந்தியக் கலாச்சாரத்தை இங்குள்ள இந்தியர்களுக்கு நினைவுப்படுத்த நீ நினைக்கிறாய். ஆனால் இந்த கிரியைகள் தான் கலாச்சாரமா என்று கேள்விகள் கேட்டுத் தாண்டி … Continue reading

>காட்டில் ஒரு மான்

> அம்பை அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை … Continue reading