என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி.

‘காதுகள்’ நாவலுக்கு – 1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எம்.வி. வெங்கட்ராம் நிகழ்த்திய ஏற்புரை. நன்றி : அகரம் பதிப்பகம். எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில்  சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி மட்டும் அல்ல, எனக்குத் தென்படுகிற வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றையும் சுட்டிக் காட்டும் பல சிறுகதைகள், நாவல்கள், பல குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள் … Continue reading

கலக்கத்திலும் கனிவை கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்-ரவிசுப்ரமணியன்

வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்கமுடியாது நல்ல கலைஞர்களுக்கு. கலைக்காய் சமூகத்திற்காய் தன் வாழ்வின் பெரும்பகுதியை  கரைத்துக் கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமை கொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை. “கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவுமிலார்…” என்பதை அவன் அறிந்தவனாகையால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சதா இழைஇழையாய் தன் படைப்பின் நெசவை அவன் தொடர்ந்தபடி இருக்கிறான். … Continue reading

‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு இசங்கள் கிடையாது – எம்.வி.வெங்கட் ராம்

சந்திப்பு : அப்பணசாமி, தேனுகா, கண்ணம்மா ‘மணிக்கொடி’ இலக்கியக் கொடியைச் சேர்ந்த எம்.வி. வெங்கட்ராம், எம்.வி.வி. என புதுமைப்பித்தன் முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர் வரை அழைக்கப்படுபவர். அவரது ‘வேள்வித் தீ ‘, ‘அரும்பு’ , ‘நித்திய கன்னி’ முதல் சமீபத்திய ‘காதுகள்’ நாவல் வரை நாவல்களுக்காக தமிழ்  இலக்கிய உலகம் முழுமையாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இருந்தாலும் இவரது சிறுகதைகள், கவிதைகள் உலகம் பற்றி தமிழ் உலகம் அவ்வளவாக அறியாதது. மிகச் சமீபத்தில் இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு … Continue reading

பைத்தியக்காரப் பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்

விழிப்பு வந்ததும் ராஜம் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கக் கலக்கம் இல்லாவிட்டாலும் எதையோ எதிர் பார்த்தவன் போல் கொஞ்ச நேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பக்கத்து வீட்டுச் சேவல் ‘கொக்…. கொக் கொக்கோகோ’ என்று கூவியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. ‘நான் கண் திறக்க வேண்டும் என்று இந்தச் சேவல் காத்திருக்கும் போல இருக்கு! இப்போ மணி என்ன தெரியுமா? சரியாக நாலரை!’ என்று தனக்குள் சொல்லிச் சிரித்தவாறு, இடுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டிக் … Continue reading

>அடுத்த வீடு – எஸ்.ராமகிருஷ்ணன்

> எம்.வி. வெங்கட்ராம் சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில் இருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, Ô‘என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க?’Õ என்று கேட்டது. ஒரு நிமிஷம் சுள்ளென சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. நிஜம்தானே..? நம் குழந்தைகள் மட்டும்தான் நம் கவனத்தில் இருக்கிறார்கள். நமது அண்டை வீட்டிலும் குழந்தைகள் … Continue reading

>தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்

> எம்.வி. வெங்கட்ராம் கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும். என் மகனைப் பற்றி நானே புகழ்ந்து பேசினால், ‘கலியாணம் ஆகாத பையன்; குறைத்துப் பேசினால் மார்க்கெட் ஆகுமா, என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கலாம். ‘காக்காயின் பொன் குஞ்சு’ என்று பரிகாசம் செய்கிறவர்களும் இருப்பார்கள். என் … Continue reading