நாற்காலி – கி.ராஜநாராயணன்

‘நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?’ எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப ‘அஜெண்டா’வில் வைக்கப்பட்டு இந்த விஷயத்தில் விவாதம் தொடங்கியது. முதல் நாள் எங்கள் வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ். வந்தவர் நம்மைப் போல்வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வரப்படாதோ? சூட்டும் பூட்டுமாக வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான்உண்டு. அதன் உயரமே முக்கால் அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து கொள்வாள்,அவளுக்கு பாரியான உடம்பு. … Continue reading

கரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா

கடவுள் விடுகிற மூச்சைப் போல காற்று வீசும் கரிசல்வெளி வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம் கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்                                                                                                                – தேவதச்சன் கரிசல் நிலத்தைப் பற்றிய துல்லியமான சித்திரத்தை தேவதச்சனின் இந்தக் கவிதை நமக்குத் தருகிறது. முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட கிழிந்த துணியெனப் படபடத்த படியே ஆகாசத்தின் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் சூரியனும், ஆட்டுஉரல்களில்கூட நிரம்பி வழியும் வெயிலும், குடிநீருக்காக அலைந்து திரியும் பெண்களும், கசப்பேறிய வேம்பும், கானலைத் துரத்தியலையும் … Continue reading

>கடிதம்: கு.அழகிரிசாமி கி.ராஜ நாராயணனுக்கு எழுதியது.

> கு.அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் கட்டிப் புரண்டு விளையாடியவர்கள். பின்னால் அழகிரிசாமி வேலை கிடைத்து வெளியூர் போனபோது குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒரு கடிதமாவது எழுதுவது என்கிற பழக்கம் அவர்களைத் தொற்றிக்கொண்டது. ‘‘தூங்கி எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு பூஜைக்கு உட்காருவது போல், கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது’’ என்கிறார் ராஜநாராயணன். இவற்றில் கு. அழகிரிசாமியின் கடிதங்கள் தொகுக்கப்பட்டு 1987ஆம் ஆண்டு … Continue reading

கி.ராஜநாராயணன் படைப்புகள்-ஜெயமோகன்

  இனக்குழு அழகியலின் முன்னோடி   கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் பெண்களை பலாத்காரம் செய்கிறானா, கொள்ளையடிக்கிறானா என்று அவள் கேட்கிறாள். இல்லை என்று சொல்கிறார்கள்.அப்படியானால்  அவர்களை நாம் வரவேற்போம், அவர்களுடன் சேர்ந்துகொள்வோம் என்று அவள் பதில் சொல்கிறாள். … Continue reading

>கோமதி – கி. ராஜநாராயணன்

> கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த  ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை. உருவம் ஆணாக இருந்தாலும், இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான்.ஆண்களோடு விளையாடவேண்டியது … Continue reading

>கதவு – கி.ராஜநாராயணன்

>   கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான் சீனிவாசன். உடனே “எனக்கொரு டிக்கெட், உனக்கொரு டிக்கெட்” என்று சத்தம் போட்டார்கள். “எந்த ஊருக்கு வேணும்? ஏய் இந்த மாதிரி இடிச்சி தள்ளினா என்ன அர்த்தம்? அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன்” “இல்லை, இல்லை, இடிச்சி தள்ளலே” “சரி, எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்?” குழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் “திருநெல்வேலிக்கு” … Continue reading

>கன்னிமை – கி. ராஜநாராயணன்

>   சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள். ‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக் கொண்டாள். அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி அவளுக்கு நிகர் அவளேதான். அவள் ‘மனுஷி’யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள் குடும்பத்துக்கே பொன் நாட்கள். … Continue reading

>சுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்!-கி.ரா

> கி.ராஜ நாராயணன் என்னுடைய அனுபவத்தில் படைப்பாளி சு.ரா. என்பதைவிட, நங்கள் (கி.ரா.,  தீப.நடராஜன்) சுந்தர ராமசாமி என்கிற மாமனிதரைப் பார்த்து அவரோடு இணங்கி இருந்ததையே பொன்னான நாட்கள் என்று நினைக்கிறேம். தொடக்க காலத்தில் இருந்த சுந்தர ராமசாமி எங்களுக்குப் பிரியமானவர். உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒரு மாமனார் போல கண்டவுடன் சந்தோசம் கொண்டு, கடைகளுக்கு அழைத்துக்கொண்டுபோய் விதவிதமான தின்பண்டங்களை வாங்கித் தருவதும், பல இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போய் சுற்றிக் காண்பிப்பதும், நேரம் … Continue reading

>ஒரு வாய்மொழிக் கதை-கி ராஜநாராயணன்

> கி ராஜநாராயணன் கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன். எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா ‘ண்ணு கேக்கிறதுண்டு. நாம ரெண்டுலெ எதையாவது கேட்டு வைக்கணும். ஆனா அவங்க வாழ்ந்த கதையும் வராது; தாழ்ந்த கதையும் வராது. ஏதாவது ஒரு கதை வரும். பின்னெ என்னத்துக்கு இந்த கேள்விண்ணு நினைக்கலாம்.ஒரு வேளை கொஞ்சம் யோசிச்சுக்கிட அவகாசம் வேணும்ங்கிறதுக்காக இருக்கலாம். எல்லாம் ஒரு ‘இது … Continue reading

>கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன்

> கி. ராஜநாராயணன் கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான வாசகர்களின் வரவேற்பையும் சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்ற நாவலிலிருந்து சில பகுதிகள்…   முதல் முதலில் அந்தக் கிராமத்தில் ஒரு அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. பெரிய பெரிய காங்கிரஸ் பேச்சாளர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னால் அவர்களில் சிலர் உணர்ச்சி ததும்பப் பாடல்கள் பாடினார்கள். அதைப்போலப் பாடல்கள் கிராமத்துக்குப் புதுசு. ஆவலோடு அவைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். … Continue reading