ந. பிச்சமூர்த்தி – ‘எழுத்து’ நேர்காணல்

ந. பிச்சமூர்த்தி 1900 ஆகஸ்ட் பதினைந்து அன்று தஞ்சை ஜில்லா கும்பகோணத்தில் பிறந்தவர். ஹரி கதை காலட்சேபம், நாடகத்துறை, ஆயுர்வேத வைத்யம், தாந்தீரிக உபாசனையில் ஈடுபாடு, நான்கு மொழிகளில் சாகித்யம் இயற்றல் இவைகளில் வல்லுநரும், சகலகலா வல்லவருமான அவரது தந்தை நடேச தீட்சதர் காலம்சென்றபோது அவருக்கு வயது ஏழு. தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் டவுன் உயர்தரப் பாடசாலையில் படித்து, கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் படித்து பிலாசபி எடுத்துக்கொண்டு பி.ஏ பட்டம் பெற்று பின் சட்டப்படிப்பு … Continue reading

சாகுருவி – ந.பிச்சமூர்த்தி

கொக்கு படிகக் குளத்தோரம் கொக்கு. செங்கால் நெடுக்கு வெண்பட்டுடம்புக் குறுக்கு முடியில் நீரை நோக்கும் மஞ்சள் கட்டாரி மூக்கு. உண்டுண்டு அழகுக் கண்காட்சிக்குக் கட்டாயக் கட்டணம். சிலவேளை மீனும் பலவேளை நிழலும்… வாழ்வும் குளம் செயலும் கலை நாமும் கொக்கு. சிலவேளை மீனழகு பலவேளை நிழலழகா? எதுவாயினென்ன? தவறாது குளப்பரப்பில் நம்மழகு- தெரிவதே போதாதா? சாகுருவி இருள் பழுத்த இரவினில் விண்ணின் மீன்கள் உதிர்ந்தன. உயிர் முடிந்த சருகுகள் ஊசலாடி விழுந்தன. நிழலும் நீரும் முடிய மாந்தர் … Continue reading

>வெள்ளி விழா – ந.பிச்சமூர்த்தி

> வெள்ளி விழா சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு மெரினாவில் காந்தி சிலைமுதல் விவேகானந்தர் சிலைவரை சவுக்கு முளை அடித்து குறுக்குக் கழிகட்டி வேடிக்கை பார்க்கவரும் வெள்ளம் அணிவகுப்பை அழிக்காமல்  வெற்றிக்கு வித்திட்ட கண்டிராக்டர் மறுநாள் கணக்குப் பார்த்தார் நல்ல ஆதாயம். மக்கள் கணக்குப் பார்த்தார். விழாதான் ஆதாயம் காலைக் கருக்கிருட்டில் சுள்ளி பொருக்க வந்த கிழவிக்கு சவுக்கைப் பட்டைகளை உரித்தெடுத்துக் கொண்டபோது ஆளரவம் கேட்டதனால் ஆதாயம் குறைப் பிரசவம் கொக்கு படிகக் குளத்தோரம் கொக்கு. செங்கால் … Continue reading

>ஞானப்பால் – ந. பிச்சமூர்த்தி

>   லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் என்ற நினைப்பு அவன் நெஞ்சில் தடித்தே இருந்தது. ‘அ’னா ‘ஆ’வன்னா தெரியாத கரிக்கட்டைக்குப் பதினைந்து ரூபாய் சம்பளமும், சாப்பாடும், தினம் ஆறுபேருக்குச் சாப்பாடு போட்டுச் சமாளிக்கும் அதிகாரமும் எல்லாருக்கும் இலேசில் கிடைத்துவிடுமா என்ன? பிள்ளை குட்டி இருந்திருந்தாலாவது துரதிர்ஷ்டத்தைப் பற்றி நினைக்க வேண்டி இருக்கும்; சத்திரத்து முதலியாரை வையவேண்டி இருக்கும். … Continue reading

தரிசனம் – ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி தரிசனம்      நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம். மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று. நான் கண்ணாமூச்சி விளையாடினேனோ அல்லது மின்னலா?       திரும்பி வீட்டிற்குள் வந்து … Continue reading

>பலூன் பைத்தியம் -ந.பிச்சமூர்த்தி

> ந. பிச்சமூர்த்தி பலூன் பைத்தியம்      இன்றைய தினம் குழந்தைகள் பலூன் வாங்கினார்கள். அவர்களுக்கும் அவர்கள் தாயாருக்கும் சண்டை. காசு தரமாட்டேன் என்ற தாயார் கட்சி. குழந்தைகள் அழுகை எதிர்க்கட்சி.      பலூன் வாங்கும் சமயம் ஒவ்வொன்றிலும் இந்தத் தகராறுதான். இதுதான் கடைசி தடவை என்ற எச்சரிக்கையுடன் காசும் கிடைத்துவிடும். குழந்தைகள் கைக்குப் பலூனும் வந்துவிடும். இந்தத் தகராறு விஷயம் பலூனுக்கு எப்படித் தெரியும்! சில  நிமிஷங்களுக்குள் பட்டென்று வெடித்துவிடும். ஒரு வேளை தெரிந்துதான் குழந்தைகளைப் … Continue reading

>முதல் பிடில் – ந.பிச்சமூர்த்தி

> ந.பிச்சமூர்த்தி      நடு நிசி, ஒரு சின்னக்குரல் – குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் – சமாதானம் சொல்லுவது போல, சின்னக் குரல் பழுத்து வேதனை அடைந்தது. எதிர் குரல் ஏங்கிக் கனிந்து ஓலமாயிற்று. தெருவாசிகளின் தூக்கம் கலைந்தது. ஒவ்வொருவராக எழுந்து மாடியிலிருந்து இருளில் கூர்ந்து பார்த்தனர். முதலில் ஒருவர் கண்ணிலும் ஒன்றும் படவில்லை. அதனால் திகிலை விளைவிக்கும் அந்த ஓலம் மட்டும் நிதானமாய் போகப் போக உயர்ந்து கொண்டு போயிற்று. … Continue reading

>நெருப்புக் கோழி – ந.பிச்சமூர்த்தி

> ந.பிச்சமூர்த்தி நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள்தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன். வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. ‘கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி ஒன்றும் சிறந்ததல்ல’ என்று இப்பொழுதுதானே தெரிகிறது? நாட்டு வைத்தியருடன் கறி, … Continue reading

வெறும் செருப்பு – ந. பிச்சமூர்த்தி

  ந. பிச்சமூர்த்தி அதுவரையில் தீர்மானத்துடன் வராதிருந்த மனது அன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. முதலையின் பிளந்த வாயைப்போன்ற செருப்புடன் எத்தனை மணிகள்தான், எத்தனை நாட்கள்தான் ஓட்டமுடியும்? நடக்கும் போதெல்லாம் செருப்பின் கீழ் அட்டை மடித்துக் கொள்ளும். அப்பொழுது ஒட்டகையின் முதுகின்மேல் நடப்பது போன்ற வேதனையும் கஷ்டத்தையும் அடைந்தேன். நல்லவேளை அன்று மனதே உத்தரவு கொடுத்துவிட்டது. விர்ரென்று கடைத்தெருவுக்குச் சென்று நவீன செருப்புக் கடைக்குள் நுழைந்தேன். கடைக்காரப் பையன் விதவிதமான செருப்பு, பூட்ஸ¤ தினுசுகளை என் முன் … Continue reading

>பிச்சமூர்த்தியின் படைப்புலகம்-சுந்தர ராமசாமி

>   (1991ஆம் ஆண்டு வானதி பதிப்பகம் வெளியிட்ட ‘ந. பிச்சமூர்த்தியின் கலை _ மரபும் மனித நேயமும்’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை.) பிச்சமூர்த்தியின் படைப்புலகத்தின் பொதுக் குணங்களைப் பற்றி முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவருடைய இயல்புகள் பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவருடைய படைப்புகளை உணர நமக்கு உதவியாக இருக்கும். அவர் வெளிப் படையானவர் என்பதாலும், சிக்கலற்றவர் என்பதாலும் அவருடைய ஆளுமையைப் புரிந்து கொள்வது சுலபம். மேலும் மிக ஆத்மார்த்தமான கலைஞரான … Continue reading